• May 13 2026

யாழ்.தென்மராட்சி வரணி குடத்தனை வீதி புனரமைப்பு வேலைகளை துரிதபடுத்த மக்கள் கோரிக்கை!

Ziya / May 13th 2026, 12:28 pm
image

யாழ்.தென்மராட்சி வரணி குடத்தனை வீதி புனரமைப்பு வேலைகள் கடந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட போதும் இதுவரையிலும் வேலைகள் முடிவடையவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.


இதனால் தாம் போக்குவரத்திற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.


இது தொடர்பில் பல தடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.


அதேவளை வீதி புனரமைப்புக்கு பயன்படுத்திய பொருட்கள் சில தரமற்றதாகக் காணப்பட்டதாகவும் தெரிவித்த மக்கள் இந்த பணியில் ஊழல் நடைபெற்றதா? என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


இந்த நிலையில் பிரதேச மக்கள் இது தொடர்பில் பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.


இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் இன்று பிற்பகல் வரணி மாசேரிப் பிரதேசத்திற்கு வருகை தந்து குறித்த வீதியை பார்வையிட்டுள்ளதுடன் மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.


அத்துடன் முக்கியமான இந்த வீதியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து உடனடியாகச் சீர் செய்து தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

யாழ்.தென்மராட்சி வரணி குடத்தனை வீதி புனரமைப்பு வேலைகளை துரிதபடுத்த மக்கள் கோரிக்கை யாழ்.தென்மராட்சி வரணி குடத்தனை வீதி புனரமைப்பு வேலைகள் கடந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட போதும் இதுவரையிலும் வேலைகள் முடிவடையவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் தாம் போக்குவரத்திற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பில் பல தடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.அதேவளை வீதி புனரமைப்புக்கு பயன்படுத்திய பொருட்கள் சில தரமற்றதாகக் காணப்பட்டதாகவும் தெரிவித்த மக்கள் இந்த பணியில் ஊழல் நடைபெற்றதா என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இந்த நிலையில் பிரதேச மக்கள் இது தொடர்பில் பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் இன்று பிற்பகல் வரணி மாசேரிப் பிரதேசத்திற்கு வருகை தந்து குறித்த வீதியை பார்வையிட்டுள்ளதுடன் மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.அத்துடன் முக்கியமான இந்த வீதியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து உடனடியாகச் சீர் செய்து தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement