• Apr 29 2026

22 பிக்குகளில் 20 பேர் போதைப்பெருள் பாவித்தது உறுதி!

shanu / Apr 28th 2026, 11:06 am
image

கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையத்தில்கைதான பிக்குகளில்  20 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  


கடந்த 26 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து வருகை தந்த 22 பிக்குகள், சுமார் 110 கிலோகிராம் 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' போதைப்பொருட்களை பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டனர்.


கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட 22  பிக்குகளும்  நீர்கொழும்பு மேலதிக நீதிவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


அதேநேரம், கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளில் 20 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.


இவ்வாறான பின்னணியில் குறித்த சம்பவம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் புத்தசாசன அமைச்சில் இன்று (28)  விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. 


சியாம், அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர தெரிவித்தார்.


22 பிக்குகளில் 20 பேர் போதைப்பெருள் பாவித்தது உறுதி கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையத்தில்கைதான பிக்குகளில்  20 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  கடந்த 26 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து வருகை தந்த 22 பிக்குகள், சுமார் 110 கிலோகிராம் 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' போதைப்பொருட்களை பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டனர்.கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட 22  பிக்குகளும்  நீர்கொழும்பு மேலதிக நீதிவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.அதேநேரம், கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளில் 20 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.இவ்வாறான பின்னணியில் குறித்த சம்பவம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் புத்தசாசன அமைச்சில் இன்று (28)  விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. சியாம், அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement