• Jun 10 2026

வடக்கில் நெதர்லாந்து தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு – நவீன தொழில்நுட்பங்களுடன் களப்பணி

Chithra / Jun 9th 2026, 8:37 pm
image

இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு பகுதிகளில் விரிவான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.


தகவல்களின்படி, குறித்த நிபுணர் குழு யாழ்ப்பாணத்தில் 15 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு தொல்லியல் மற்றும் நிலவியல் சார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது.


இந்த ஆய்வுகளின் போது, நிலத்தின் தன்மை, நிலத்தடியில் காணப்படும் தொன்மைச் சுவடுகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகள் தொடர்பான தரவுகள் நவீன தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.


குறிப்பாக நல்லூர், நெடுந்தீவு மற்றும் காரைநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான கள ஆய்வுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த ஆய்வின் மூலம் வடக்கு மாகாணத்தின் தொல்லியல் பாரம்பரியம் தொடர்பான புதிய தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வடக்கில் நெதர்லாந்து தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு – நவீன தொழில்நுட்பங்களுடன் களப்பணி இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு பகுதிகளில் விரிவான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.தகவல்களின்படி, குறித்த நிபுணர் குழு யாழ்ப்பாணத்தில் 15 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு தொல்லியல் மற்றும் நிலவியல் சார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது.இந்த ஆய்வுகளின் போது, நிலத்தின் தன்மை, நிலத்தடியில் காணப்படும் தொன்மைச் சுவடுகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகள் தொடர்பான தரவுகள் நவீன தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.குறிப்பாக நல்லூர், நெடுந்தீவு மற்றும் காரைநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான கள ஆய்வுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த ஆய்வின் மூலம் வடக்கு மாகாணத்தின் தொல்லியல் பாரம்பரியம் தொடர்பான புதிய தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement