• Aug 30 2026

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்ட பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கல்

dorin / Aug 29th 2026, 10:49 am
image

2026 ஆகஸ்ட் 28ஆம் திகதி, இலங்கை ஜனாதிபதி  அநுர குமார திசாநாயக்க, இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் மைத்திரேய குல்கர்ணி ஆகியோருடன் இணைந்து, இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் பயனாளிகளுக்கு 165 காணி உறுதிப் பத்திரங்களை வழங்கினார்.

பதுளை மாவட்டம் பூணாகல பகுதியில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்காக இலங்கை அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதயபுரம்’ வீடமைப்புத் திட்டம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வின் போதே இந்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்  சமந்த வித்யாரத்ன, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்  சுசில் ரணசிங்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்  சரோஜா சாவித்திரி பௌல்ராஜ், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்  சுந்தரலிங்கம் பிரதீப், ஊவா மாகாண ஆளுநர்  கபில ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள், ஊவா மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட மாகாண அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 இதற்கு முன்னதாக, 2026 ஏப்ரல் மாதம் இந்தியாவின் துணை ஜனாதிபதி  சி.பி. ராதாகிருஷ்ணன், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இறுதி தொகுதி வீடுகளைத் திறந்து வைத்தார். இதன் மூலம் மூன்றாம் கட்டப் பணிகள் நிறைவடைந்தன.

மூன்றாம் கட்டத்தின் கீழ், பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்காக 4,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

சுமார் 1,835 கோடி இந்திய ரூபாய் மொத்த நிதி ஒதுக்கீட்டுடன் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டம், இலங்கையில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் முக்கியமான மானிய உதவித் திட்டங்களில் ஒன்றாகும்.

இத்திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களின் கீழ், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் பெருந்தோட்ட சமூகத்தின் நலனில் இந்தியா தொடர்ந்து கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், இந்தியப் பிரதமர் மேதகு நரேந்திர மோடி 2017ஆம் ஆண்டு இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தை அறிவித்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள இந்த நான்காம் கட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் 1,300 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளன.

இந்தியா – இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பு கூட்டாண்மையின் மொத்த பெறுமதி 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உள்ளது. இதில் சுமார் 880 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானிய உதவியாக வழங்கப்பட்டுள்ளன.

மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இந்த அபிவிருத்தி கூட்டாண்மை, இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய பல்வேறு துறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் மிகவும் தேவையுடைய மக்களுக்கு நேரடியான மற்றும் பயனுள்ள நலன்கள் கிடைத்து வருகின்றன.


இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்ட பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கல் 2026 ஆகஸ்ட் 28ஆம் திகதி, இலங்கை ஜனாதிபதி  அநுர குமார திசாநாயக்க, இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் மைத்திரேய குல்கர்ணி ஆகியோருடன் இணைந்து, இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் பயனாளிகளுக்கு 165 காணி உறுதிப் பத்திரங்களை வழங்கினார்.பதுளை மாவட்டம் பூணாகல பகுதியில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்காக இலங்கை அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதயபுரம்’ வீடமைப்புத் திட்டம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வின் போதே இந்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்  சமந்த வித்யாரத்ன, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்  சுசில் ரணசிங்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்  சரோஜா சாவித்திரி பௌல்ராஜ், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்  சுந்தரலிங்கம் பிரதீப், ஊவா மாகாண ஆளுநர்  கபில ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள், ஊவா மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட மாகாண அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதற்கு முன்னதாக, 2026 ஏப்ரல் மாதம் இந்தியாவின் துணை ஜனாதிபதி  சி.பி. ராதாகிருஷ்ணன், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இறுதி தொகுதி வீடுகளைத் திறந்து வைத்தார். இதன் மூலம் மூன்றாம் கட்டப் பணிகள் நிறைவடைந்தன.மூன்றாம் கட்டத்தின் கீழ், பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்காக 4,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.சுமார் 1,835 கோடி இந்திய ரூபாய் மொத்த நிதி ஒதுக்கீட்டுடன் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டம், இலங்கையில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் முக்கியமான மானிய உதவித் திட்டங்களில் ஒன்றாகும்.இத்திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களின் கீழ், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.இலங்கையின் பெருந்தோட்ட சமூகத்தின் நலனில் இந்தியா தொடர்ந்து கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், இந்தியப் பிரதமர் மேதகு நரேந்திர மோடி 2017ஆம் ஆண்டு இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தை அறிவித்தார்.தற்போது நடைமுறையில் உள்ள இந்த நான்காம் கட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் 1,300 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளன.இந்தியா – இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பு கூட்டாண்மையின் மொத்த பெறுமதி 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உள்ளது. இதில் சுமார் 880 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானிய உதவியாக வழங்கப்பட்டுள்ளன.மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இந்த அபிவிருத்தி கூட்டாண்மை, இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய பல்வேறு துறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் மிகவும் தேவையுடைய மக்களுக்கு நேரடியான மற்றும் பயனுள்ள நலன்கள் கிடைத்து வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement