• May 22 2026

வறிய மக்களின் வீட்டுக் கனவுக்கு தடையா? வயல் காணி விவகாரத்தில் சர்ச்சை

Chithra / May 22nd 2026, 3:19 pm
image

வயல் காணிகள் என்ற உரிம வரையறிக்குள் இருக்கும் குடியிருப்புக் காணிகளை வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அவசிய தேவைகளின் போது சட்டரீதியான அனுமதிக்காக செல்லும் மக்கள், துறைசார் திணைக்களங்களால் அலைக்களிக்கப்படும் நிலையை கருத்தில் கொண்டு குறித்த காணி நிலங்களை குடியிருப்பு நிலமாக மாற்றும் வரையில்  வீட்டுத்திட்டம் உள்ளிட்ட கட்டுமாணங்களை கட்டுவதற்காக பிரதேச சபை வழங்கும் அனுமதி வழங்கலில் இலகுவான  பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த, வேலணை பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் குறித்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டிய உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் காலம் தாழ்த்துதல் என்ற விடயத்தால் அப்பாவி வறிய மக்களின் "எமக்கும் சொந்த வீடு கிடைக்கும்" என்ற  கனவுகளை கலைத்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் -


2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்று நிரூபம் 07/2018 பிரகாரம், வயல் காணியில் வீடு கட்டுவதாயின் பல்வேறு திணைக்களங்களில் அனுமதி பெறவேண்டி சட்டம் இருக்கின்றது.


இந்த சட்ட வரைமுறைக்கு ஏற்ப வீடு கட்டுவதற்கான அனுமதியை பெறுவதற்கு குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் குறித்த திணைக்களங்களினால் அப்பாவி மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.


குறிப்பாக கட்டிடம் தொடர்பான COC அறிக்கை பெறுவதில் வறிய மக்கள் சொல்லெணா துன்பங்களையும் நிதி இழப்புக்ககையும் சந்திக்க நேரிடுகின்றது.


இந்த COC அறிக்கையை மக்கள் பெறும் பொழுது தான் அவர்களது நிலம் எவ்வகையில் உள்ளது என்ற பிரச்சினைக்கு உள்ளாகின்றது.


வேலணை பிரதேசத்தை பொறுத்தளவில் அதிகளவான நிலங்கள் இன்னமும் வயல் காணிகளாகவே உரிமங்கள் இருக்கின்றன. 


இதனால் குடியிருப்பு நிலம் என்ற உரிமத்தை அக்காணிகள் கொண்டிராமையால் அனுமதியும் காலம் தாழ்த்தப்படுவதுடன் அனுமதி கிடைக்காமலும் போகும் நிலை உருவாகின்றது.


அதனால் நீண்டகாலமாக ஓலைக் குடில்களிலும் தற்காலிக வீடுகளிலும் வாழ்ந்துவரும் எம்மூர் வறிய மக்களும் சரி சிறுகச் சிறுக தமது உழைப்பில் சேகரித்த பணத்தில் ஒரு சிறு வீட்டையாவது தான் வாழும் காலத்தில் கட்ட வேண்டும் என்ற கனவுடனும் இருக்கும் மக்களின் கனவுகளுன்  நனவாக முடியாமல் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.


எனவே அரசாலோ அன்றி நிறுவனங்களாலோ கிடைக்கும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்களின் அவசிய தேவைகளை முன்னெடுக்க தடையாக இருக்கும் இந்த COC யை மக்கள் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை கொடுத்துவிட்டு, அக்காலப்பகுதியில் கட்டுமாணத்தை முன்னெடுத்துச் செல்ல எமது சபை நெகிழ்வுப் போக்கொன்றை கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கின்றது என்றார்.


பிரதேசத்தினதும் மக்களினதும் அவசியம் கருதி குறித்த கோரிக்கை ஏற்கனவே சபையில் விவாதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தமையாலும் சபையின் உறுப்பினர்கள் அவசியம் கருதிய தீர்மானமாக இதை முன்வைத்த நிலையில் அதற்கு தவிசாளர் அசோக்குமார், சபை அனுமதிதந்தால் தளுவல் அனுமதி ஊடாக, COC க்கான உரிம மாற்றம் செய்ய ஆவணங்கள் சபர்ப்பிக்கப்பட்டமை உறுதிப்படும் பட்சத்தில் நெகிழ்வுப் போக்கு காட்டலாம் என கூறியிருந்தார்.


ஆனாலும் சபையில் இருந்த ஓர் உறுப்பினர் குறித்த விடையம் அவசியம் கருதியதாக தீர்மானிக்க முடியாது என்று குழப்பத்தை ஏற்படுத்தியதால் தவிசாளர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவுக்கு இவ்விடையத்தை  கொண்டுசெல்வதாக தெரிவித்திருந்தார்.


உறுப்பினரின் குறித்த செயற்பாட்டால் உள்ளூராட்சி மன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக தவிசாளருக்கு இருக்கும் விசேடத்துவம் ஊடாக மக்களுக்கு  கிடைக்கவிருந்த வாய்ப்பும் தவறிப்போனமை குறிப்பிடத்தக்கது

வறிய மக்களின் வீட்டுக் கனவுக்கு தடையா வயல் காணி விவகாரத்தில் சர்ச்சை வயல் காணிகள் என்ற உரிம வரையறிக்குள் இருக்கும் குடியிருப்புக் காணிகளை வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அவசிய தேவைகளின் போது சட்டரீதியான அனுமதிக்காக செல்லும் மக்கள், துறைசார் திணைக்களங்களால் அலைக்களிக்கப்படும் நிலையை கருத்தில் கொண்டு குறித்த காணி நிலங்களை குடியிருப்பு நிலமாக மாற்றும் வரையில்  வீட்டுத்திட்டம் உள்ளிட்ட கட்டுமாணங்களை கட்டுவதற்காக பிரதேச சபை வழங்கும் அனுமதி வழங்கலில் இலகுவான  பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த, வேலணை பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் குறித்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டிய உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் காலம் தாழ்த்துதல் என்ற விடயத்தால் அப்பாவி வறிய மக்களின் "எமக்கும் சொந்த வீடு கிடைக்கும்" என்ற  கனவுகளை கலைத்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் -2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்று நிரூபம் 07/2018 பிரகாரம், வயல் காணியில் வீடு கட்டுவதாயின் பல்வேறு திணைக்களங்களில் அனுமதி பெறவேண்டி சட்டம் இருக்கின்றது.இந்த சட்ட வரைமுறைக்கு ஏற்ப வீடு கட்டுவதற்கான அனுமதியை பெறுவதற்கு குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் குறித்த திணைக்களங்களினால் அப்பாவி மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.குறிப்பாக கட்டிடம் தொடர்பான COC அறிக்கை பெறுவதில் வறிய மக்கள் சொல்லெணா துன்பங்களையும் நிதி இழப்புக்ககையும் சந்திக்க நேரிடுகின்றது.இந்த COC அறிக்கையை மக்கள் பெறும் பொழுது தான் அவர்களது நிலம் எவ்வகையில் உள்ளது என்ற பிரச்சினைக்கு உள்ளாகின்றது.வேலணை பிரதேசத்தை பொறுத்தளவில் அதிகளவான நிலங்கள் இன்னமும் வயல் காணிகளாகவே உரிமங்கள் இருக்கின்றன. இதனால் குடியிருப்பு நிலம் என்ற உரிமத்தை அக்காணிகள் கொண்டிராமையால் அனுமதியும் காலம் தாழ்த்தப்படுவதுடன் அனுமதி கிடைக்காமலும் போகும் நிலை உருவாகின்றது.அதனால் நீண்டகாலமாக ஓலைக் குடில்களிலும் தற்காலிக வீடுகளிலும் வாழ்ந்துவரும் எம்மூர் வறிய மக்களும் சரி சிறுகச் சிறுக தமது உழைப்பில் சேகரித்த பணத்தில் ஒரு சிறு வீட்டையாவது தான் வாழும் காலத்தில் கட்ட வேண்டும் என்ற கனவுடனும் இருக்கும் மக்களின் கனவுகளுன்  நனவாக முடியாமல் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.எனவே அரசாலோ அன்றி நிறுவனங்களாலோ கிடைக்கும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்களின் அவசிய தேவைகளை முன்னெடுக்க தடையாக இருக்கும் இந்த COC யை மக்கள் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை கொடுத்துவிட்டு, அக்காலப்பகுதியில் கட்டுமாணத்தை முன்னெடுத்துச் செல்ல எமது சபை நெகிழ்வுப் போக்கொன்றை கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கின்றது என்றார்.பிரதேசத்தினதும் மக்களினதும் அவசியம் கருதி குறித்த கோரிக்கை ஏற்கனவே சபையில் விவாதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தமையாலும் சபையின் உறுப்பினர்கள் அவசியம் கருதிய தீர்மானமாக இதை முன்வைத்த நிலையில் அதற்கு தவிசாளர் அசோக்குமார், சபை அனுமதிதந்தால் தளுவல் அனுமதி ஊடாக, COC க்கான உரிம மாற்றம் செய்ய ஆவணங்கள் சபர்ப்பிக்கப்பட்டமை உறுதிப்படும் பட்சத்தில் நெகிழ்வுப் போக்கு காட்டலாம் என கூறியிருந்தார்.ஆனாலும் சபையில் இருந்த ஓர் உறுப்பினர் குறித்த விடையம் அவசியம் கருதியதாக தீர்மானிக்க முடியாது என்று குழப்பத்தை ஏற்படுத்தியதால் தவிசாளர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவுக்கு இவ்விடையத்தை  கொண்டுசெல்வதாக தெரிவித்திருந்தார்.உறுப்பினரின் குறித்த செயற்பாட்டால் உள்ளூராட்சி மன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக தவிசாளருக்கு இருக்கும் விசேடத்துவம் ஊடாக மக்களுக்கு  கிடைக்கவிருந்த வாய்ப்பும் தவறிப்போனமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement