மேற்கு ஆசியாவில் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் தொடர்புடைய இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, “ஈரான் போரை நாடவில்லை; ஆனால் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளாது” என அந்நாட்டு அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் லராக் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையான IRGC, ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் மின்ஹாத் விமானத் தளம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈரானிலிருந்து வந்ததாகக் கூறப்படும் ஆளில்லா விமானம் ஒன்று தனது கடல் எல்லையை நோக்கி நெருங்கியதை கண்டறிந்ததாக ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த ஆளில்லா விமானத்தை எதிர்கொள்ள UAE விமானப்படை நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைக்கு மேலாக பறந்ததாகக் கூறப்படும் அமெரிக்காவின் MQ-9 Reaper ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் IRGC தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு ஆகியவற்றைச் சுற்றி பதற்றம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் அதிரடி மேற்கு ஆசியாவில் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் தொடர்புடைய இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.இதைத் தொடர்ந்து, “ஈரான் போரை நாடவில்லை; ஆனால் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளாது” என அந்நாட்டு அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரானின் லராக் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது.ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையான IRGC, ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் மின்ஹாத் விமானத் தளம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.இதனிடையே, ஈரானிலிருந்து வந்ததாகக் கூறப்படும் ஆளில்லா விமானம் ஒன்று தனது கடல் எல்லையை நோக்கி நெருங்கியதை கண்டறிந்ததாக ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அந்த ஆளில்லா விமானத்தை எதிர்கொள்ள UAE விமானப்படை நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஹோர்முஸ் நீரிணைக்கு மேலாக பறந்ததாகக் கூறப்படும் அமெரிக்காவின் MQ-9 Reaper ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் IRGC தெரிவித்துள்ளது.இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு ஆகியவற்றைச் சுற்றி பதற்றம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.