உலக வர்த்தகத்தையும் எண்ணெய் விநியோகத்தையும் முடக்கியுள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான நிபந்தனைகளின் பட்டியலைத் தயாரிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி வியாழக்கிழமையன்று தெஹ்ரானுக்கு நேரில் சென்று மூத்த ஈரானிய தலைவர்களுடன் நடத்திய அதிரடித் தூதரகப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை மதிக்குமாறு ஈரானிய அதிகாரிகளிடம் கத்தார் பிரதமர் ஷேக் முகமது வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டனிடமிருந்து பொருளாதார மற்றும் ராணுவ சலுகைகளைப் பெறாமல் நீர்வழியைத் திறக்க விருப்பமில்லாத தெஹ்ரான், தற்போது மத்தியஸ்தர்களிடம் வழங்குவதற்காகத் தனது நிபந்தனைப் பட்டியலைத் தயாரித்து வருவதாக ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்மொழியப்பட்ட புதிய கப்பல் போக்குவரத்து வழித்தடம் தொடர்பாக ஈரான் ஓமானுடன் உடன்பாடு எட்டியுள்ளது.
ஈரான் தரப்பில் முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கைகளாக,
ஈரானிய துறைமுகங்களைச் சுற்றியுள்ள அமெரிக்க கடற்படை முற்றுகையை அகற்ற வேண்டும்
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்
போரால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன குறிப்பிடப்படுகின்றன.
அமரிக்கா நிபந்தனைகளை ஏற்றால், இப் பாதை பகுதியளவு ஓமான் கடலிலும், பகுதியளவு ஈரான் கடலிலும் அமைக்கப்பட்ட மையக் கால்வாய் வழியாக இயங்கும்.
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படை முற்றுகையை நீக்குவது, போர் இழப்பீடு வழங்குவது மற்றும் பொருளாதாரத் தடைகளை முழுமையாக அகற்றுவது ஆகியவை ஈரானின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன.
நேரடியாக வாஷிங்டன்-தெஹ்ரான் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், கத்தார் தயாரிக்கும் புதிய ஒப்பந்த வரைவை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பதே தற்போதைய கேள்வியாகும்.
ஹோர்முஸ் திறக்க ஈரான் ரெடி உலக வர்த்தகத்தையும் எண்ணெய் விநியோகத்தையும் முடக்கியுள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான நிபந்தனைகளின் பட்டியலைத் தயாரிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி வியாழக்கிழமையன்று தெஹ்ரானுக்கு நேரில் சென்று மூத்த ஈரானிய தலைவர்களுடன் நடத்திய அதிரடித் தூதரகப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை மதிக்குமாறு ஈரானிய அதிகாரிகளிடம் கத்தார் பிரதமர் ஷேக் முகமது வலியுறுத்தியுள்ளார்.வாஷிங்டனிடமிருந்து பொருளாதார மற்றும் ராணுவ சலுகைகளைப் பெறாமல் நீர்வழியைத் திறக்க விருப்பமில்லாத தெஹ்ரான், தற்போது மத்தியஸ்தர்களிடம் வழங்குவதற்காகத் தனது நிபந்தனைப் பட்டியலைத் தயாரித்து வருவதாக ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி உறுதிப்படுத்தியுள்ளார்.முன்மொழியப்பட்ட புதிய கப்பல் போக்குவரத்து வழித்தடம் தொடர்பாக ஈரான் ஓமானுடன் உடன்பாடு எட்டியுள்ளது. ஈரான் தரப்பில் முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கைகளாக,ஈரானிய துறைமுகங்களைச் சுற்றியுள்ள அமெரிக்க கடற்படை முற்றுகையை அகற்ற வேண்டும்ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்போரால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன குறிப்பிடப்படுகின்றன.அமரிக்கா நிபந்தனைகளை ஏற்றால், இப் பாதை பகுதியளவு ஓமான் கடலிலும், பகுதியளவு ஈரான் கடலிலும் அமைக்கப்பட்ட மையக் கால்வாய் வழியாக இயங்கும்.ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படை முற்றுகையை நீக்குவது, போர் இழப்பீடு வழங்குவது மற்றும் பொருளாதாரத் தடைகளை முழுமையாக அகற்றுவது ஆகியவை ஈரானின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன.நேரடியாக வாஷிங்டன்-தெஹ்ரான் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், கத்தார் தயாரிக்கும் புதிய ஒப்பந்த வரைவை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பதே தற்போதைய கேள்வியாகும்.