• Aug 05 2026

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வௌியான தகவல்

Chithra / Aug 3rd 2026, 12:02 pm
image

 

மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


​நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 


​இதற்கமைய, ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


​அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


​இது தொடர்பில் அனைத்து வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வௌியான தகவல்  மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ​நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். ​இதற்கமைய, ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ​அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ​இது தொடர்பில் அனைத்து வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement