இந்தியாவின் துணை ஜனாதிபதி C. P. Radhakrishnan , எதிர்வரும் ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இது இந்திய துணை ஜனாதிபதியின் இலங்கைக்கான முதல் இருதரப்பு விஜயமாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது,இந்திய துணை ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திப்பார்.
மேலும், இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய , பிற முக்கிய பிரமுகர்களையும், இந்திய வம்சாவளியினர் தலைவர்களையும் சந்திப்பார்.
இலங்கை இந்தியாவின் Vision MAHASAGAR மற்றும் Neighbourhood First Policy ஆகியவற்றில் முக்கிய பிணைப்பாகும்.
இந்திய துணை ஜனாதிபதியின் இந்த விஜயம், இரு நாடுகளுக்கிடையிலான சமீபத்திய உயர்மட்ட தொடர்புகளைத் தொடர்ந்து நடைபெறுவதுடன், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஆயிரம் ஆண்டுகள் பழமையான மக்களிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய துணை ஜனாதிபதி இலங்கை விஜயம் இந்தியாவின் துணை ஜனாதிபதி C. P. Radhakrishnan , எதிர்வரும் ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இது இந்திய துணை ஜனாதிபதியின் இலங்கைக்கான முதல் இருதரப்பு விஜயமாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது,இந்திய துணை ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திப்பார். மேலும், இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய , பிற முக்கிய பிரமுகர்களையும், இந்திய வம்சாவளியினர் தலைவர்களையும் சந்திப்பார்.இலங்கை இந்தியாவின் Vision MAHASAGAR மற்றும் Neighbourhood First Policy ஆகியவற்றில் முக்கிய பிணைப்பாகும். இந்திய துணை ஜனாதிபதியின் இந்த விஜயம், இரு நாடுகளுக்கிடையிலான சமீபத்திய உயர்மட்ட தொடர்புகளைத் தொடர்ந்து நடைபெறுவதுடன், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஆயிரம் ஆண்டுகள் பழமையான மக்களிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.