• May 06 2026

ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதனை இந்தியா தடுக்க வேண்டும் - த.தே.ம.முன்னணி வலியுறுத்து!

Aathira / Feb 21st 2026, 10:11 am
image

ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதனை தடுத்து நிறுத்த இந்திய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இந்திய பிரதிநிதிகள் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதி சத்தியஞ்சல் பான்டே மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக துணைத்தூதர் சாய் முரளி – ஆகியோருடன் நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. 

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பிரசாரச் செயலாளர் நடராஜர் காண்டீபன் மற்றும் மத்தியகுழு உறுப்பினர் தீபன்திலீசன் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பில், அனுர அரசாங்கத்தின் புதிய ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு திட்டம் மற்றும் தமிழர் தாயகத்தில் பௌத்த சிங்களமயமாக்கல், இனப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள், ஒருகட்சி ஆட்சி விரோத போக்குகள் ஆகியவற்றை தமிழகத் தேசிய மக்கள் முன்னணி இந்திய தூதரக அதிகாரிகளுக்கு விளக்கி தெரிவித்தது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்ட அரசியல் அமைப்பை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 

இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை கொண்டுவர ‘சமஸ்டி’ அரசியலமைப்பை உறுதி செய்ய இந்திய அரசு அழுத்தம் செலுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.

மேலும், அனுர அரசின் ஆட்சியிலும் தொடரும் தமிழர் தாயகத்தில் பௌத்த சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள், காணி அபகரிப்பு மற்றும் நிலங்களில் சட்டவிரோத மாற்றங்கள் ஆகியவற்றை தடுத்து, காணி உரிமையாளர்களுக்கு உரிமையை வழங்க இந்திய அரசால் இராஜதந்திர அழுத்தங்கள் பிரயோகப்படுத்தப்பட வேண்டும் என்றும் முன்வைக்கப்பட்டது.

இதோடு, பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் தாமதப்படுத்தப்படுவதையடுத்து, அந்த அபிவிருத்தியை விரைவுபடுத்த இந்தியா உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதனை இந்தியா தடுக்க வேண்டும் - த.தே.ம.முன்னணி வலியுறுத்து ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதனை தடுத்து நிறுத்த இந்திய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியது.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இந்திய பிரதிநிதிகள் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதி சத்தியஞ்சல் பான்டே மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக துணைத்தூதர் சாய் முரளி – ஆகியோருடன் நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பிரசாரச் செயலாளர் நடராஜர் காண்டீபன் மற்றும் மத்தியகுழு உறுப்பினர் தீபன்திலீசன் கலந்து கொண்டனர்.இச் சந்திப்பில், அனுர அரசாங்கத்தின் புதிய ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு திட்டம் மற்றும் தமிழர் தாயகத்தில் பௌத்த சிங்களமயமாக்கல், இனப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள், ஒருகட்சி ஆட்சி விரோத போக்குகள் ஆகியவற்றை தமிழகத் தேசிய மக்கள் முன்னணி இந்திய தூதரக அதிகாரிகளுக்கு விளக்கி தெரிவித்தது.தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்ட அரசியல் அமைப்பை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை கொண்டுவர ‘சமஸ்டி’ அரசியலமைப்பை உறுதி செய்ய இந்திய அரசு அழுத்தம் செலுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.மேலும், அனுர அரசின் ஆட்சியிலும் தொடரும் தமிழர் தாயகத்தில் பௌத்த சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள், காணி அபகரிப்பு மற்றும் நிலங்களில் சட்டவிரோத மாற்றங்கள் ஆகியவற்றை தடுத்து, காணி உரிமையாளர்களுக்கு உரிமையை வழங்க இந்திய அரசால் இராஜதந்திர அழுத்தங்கள் பிரயோகப்படுத்தப்பட வேண்டும் என்றும் முன்வைக்கப்பட்டது.இதோடு, பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் தாமதப்படுத்தப்படுவதையடுத்து, அந்த அபிவிருத்தியை விரைவுபடுத்த இந்தியா உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement