2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதிச் செலுத்துகைக்கான காலக்கெடு இன்று (30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.
நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கூட்டாண்மை வணிகங்கள் வருமான வரி செலுத்த வேண்டிய நிலையில், கட்டணம் செலுத்தும்போது '25260' என்ற payment period code-ஐ பயன்படுத்துமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான வரி வகைக் குறியீடுகள் பின்வருமாறு:
நிறுவன வருமான வரி – வரி வகைக் குறியீடு 02
தனிநபர் வருமான வரி – வரி வகைக் குறியீடு 05
கூட்டாண்மை வருமான வரி – வரி வகைக் குறியீடு 09
வருமான வரிக் கட்டணங்களை இணையவழியாகவோ அல்லது இலங்கை வங்கியின் (Bank of Ceylon) எந்தவொரு கிளையிலோ செலுத்த முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிக்கப்பட்ட காலக்கெடுவிற்குப் பின்னர் செலுத்தப்படும் வரிக் கட்டணங்களுக்கு வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, வரி செலுத்த வேண்டியவர்கள் உரிய காலத்திற்குள் தங்களுக்கான வரிக் கட்டணங்களைச் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு 1944 என்ற அவசர அழைப்புச் சேவை எண்ணைத் தொடர்புகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு தொடர்பில் முக்கிய அறிவிப்பு 2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதிச் செலுத்துகைக்கான காலக்கெடு இன்று (30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கூட்டாண்மை வணிகங்கள் வருமான வரி செலுத்த வேண்டிய நிலையில், கட்டணம் செலுத்தும்போது '25260' என்ற payment period code-ஐ பயன்படுத்துமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.இதற்கான வரி வகைக் குறியீடுகள் பின்வருமாறு:நிறுவன வருமான வரி – வரி வகைக் குறியீடு 02தனிநபர் வருமான வரி – வரி வகைக் குறியீடு 05கூட்டாண்மை வருமான வரி – வரி வகைக் குறியீடு 09வருமான வரிக் கட்டணங்களை இணையவழியாகவோ அல்லது இலங்கை வங்கியின் (Bank of Ceylon) எந்தவொரு கிளையிலோ செலுத்த முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறிக்கப்பட்ட காலக்கெடுவிற்குப் பின்னர் செலுத்தப்படும் வரிக் கட்டணங்களுக்கு வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.எனவே, வரி செலுத்த வேண்டியவர்கள் உரிய காலத்திற்குள் தங்களுக்கான வரிக் கட்டணங்களைச் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.மேலதிக தகவல்களுக்கு 1944 என்ற அவசர அழைப்புச் சேவை எண்ணைத் தொடர்புகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.