• Apr 20 2026

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு - இருவர் கைது!

Ziya / Jan 26th 2026, 10:44 am
image

 சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரை, அகழ்வு உபகரணங்களுடன் பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், டின்சின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 


சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு - இருவர் கைது  சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரை, அகழ்வு உபகரணங்களுடன் பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், டின்சின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement