• May 20 2026

தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு கௌரவிப்பு!

shanu / Nov 8th 2025, 7:51 pm
image

தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளிலே வவுனியா மாவட்டத்தினை பிரதிநிதிப்படுத்தி வெற்றி வாகை சூடிய வீர வீராங்கனைக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது.



இம்முறை இடம்பெற்ற தேசிய மட்ட விளையாட்டு போட்டியிலே அரை மரதனில் 1ம் இடத்தையும், 5000 மீற்றரில் புதிய சாதனையும், 1500 மீற்றரில் 2ம் இடத்தையும் விகிர்தன் பெற்றுக் கொண்டதுடன், பரிதி வட்டம் வீசலில் கிருசிகன் 1ம் இடத்தையும், பளு தூக்கலில் கோசிகா 1ம் இடத்தையும் பெற்று வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருந்தனர்.


தேசிய மட்ட ரீதியில் வவுனியா மாவட்டத்தகற்கு பெருமை சேர்த்த குறித்த மூவருக்குமான கௌரவிப்பு நிகழ்வு வவுனியா தெற்கு வலயக் கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.



இதன்போது வவுனியா பழைய பேருந்து நிலையத்தருகே மாலை அணிவித்து பேன்ட் வாத்தியம் முழங்க வலயக்கல்வி அலுவலக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.


அதனை தொடர்ந்து மூவருக்கும் பொன்னாடை போர்த்தி பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டிருந்தது.


வவுனியா தெற்கு வலயக் கல்வி தள.முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், ஆசிரியர்கள், விளையாட்டுத்துறை பயிற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.

தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு கௌரவிப்பு தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளிலே வவுனியா மாவட்டத்தினை பிரதிநிதிப்படுத்தி வெற்றி வாகை சூடிய வீர வீராங்கனைக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது.இம்முறை இடம்பெற்ற தேசிய மட்ட விளையாட்டு போட்டியிலே அரை மரதனில் 1ம் இடத்தையும், 5000 மீற்றரில் புதிய சாதனையும், 1500 மீற்றரில் 2ம் இடத்தையும் விகிர்தன் பெற்றுக் கொண்டதுடன், பரிதி வட்டம் வீசலில் கிருசிகன் 1ம் இடத்தையும், பளு தூக்கலில் கோசிகா 1ம் இடத்தையும் பெற்று வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருந்தனர்.தேசிய மட்ட ரீதியில் வவுனியா மாவட்டத்தகற்கு பெருமை சேர்த்த குறித்த மூவருக்குமான கௌரவிப்பு நிகழ்வு வவுனியா தெற்கு வலயக் கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.இதன்போது வவுனியா பழைய பேருந்து நிலையத்தருகே மாலை அணிவித்து பேன்ட் வாத்தியம் முழங்க வலயக்கல்வி அலுவலக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.அதனை தொடர்ந்து மூவருக்கும் பொன்னாடை போர்த்தி பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டிருந்தது.வவுனியா தெற்கு வலயக் கல்வி தள.முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், ஆசிரியர்கள், விளையாட்டுத்துறை பயிற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement