2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த கையோடு எவ்வித அச்சமுமின்றி மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசுக்குப் பகிரங்க சவால் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
அரசு தாம் ஆட்சிக்கு வந்தால் தேர்தல்களை நடத்துவோம் என வாக்குறுதியளித்திருந்த போதிலும், மாகாண சபைத் தேர்தலை இன்றுவரை நடத்தாது காலம் தாழ்த்தி வருகின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசின் "வளமான நாடு – அழகான வாழ்க்கை" என்ற கொள்கைப் பிரகடனத்தில் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி 23 இலட்சம் வாக்குகளை இழந்த பின்னர் தோல்வி பயத்தால் மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே பிற்போட்டு வருகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அரச தரப்பினர் கூறிக்கொள்வதைப் போன்று அவர்களுக்கு உண்மையிலேயே மக்கள் செல்வாக்கு காணப்படுமாயின், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துவதற்குத் தயங்க வேண்டிய அவசியமில்லை என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து, தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் உண்மையான வரவேற்பும் கவர்ச்சியும் இருக்கின்றது என்று அரசு கருதினால், மாகாண சபைத் தேர்தல் எனும் 'லிட்மஸ் சோதனையை' நடத்திப் பார்க்குமாறும் அவர் சவால் விடுத்தார்.
அந்தத் தேர்தலை நடத்தும் பட்சத்தில், கடந்த பொதுத் தேர்தலில் அரசுக்குக் கிடைத்த விசேட மக்கள் ஆணைக்குத் தற்போது என்ன நேர்ந்துள்ளது என்பதை அவர்களால் துல்லியமாகக் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெறுமனே பொய்யான காரணங்களைக் கூறித் தெரிவுக்குழுக்களை அமைத்துத் தொடர்ந்தும் காலம் கடத்தாமல், வரவு - செலவுத் திட்டம் முடிந்தவுடனேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் மேலும் வலியுறுத்தினார்.
பட்ஜட் முடிந்ததும் தேர்தலை நடத்துக - அரசிடம் சஜித் வலியுறுத்து 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த கையோடு எவ்வித அச்சமுமின்றி மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசுக்குப் பகிரங்க சவால் விடுத்தார்.நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை வலியுறுத்தினார்.அரசு தாம் ஆட்சிக்கு வந்தால் தேர்தல்களை நடத்துவோம் என வாக்குறுதியளித்திருந்த போதிலும், மாகாண சபைத் தேர்தலை இன்றுவரை நடத்தாது காலம் தாழ்த்தி வருகின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.அரசின் "வளமான நாடு – அழகான வாழ்க்கை" என்ற கொள்கைப் பிரகடனத்தில் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி 23 இலட்சம் வாக்குகளை இழந்த பின்னர் தோல்வி பயத்தால் மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே பிற்போட்டு வருகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.அரச தரப்பினர் கூறிக்கொள்வதைப் போன்று அவர்களுக்கு உண்மையிலேயே மக்கள் செல்வாக்கு காணப்படுமாயின், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துவதற்குத் தயங்க வேண்டிய அவசியமில்லை என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து, தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் உண்மையான வரவேற்பும் கவர்ச்சியும் இருக்கின்றது என்று அரசு கருதினால், மாகாண சபைத் தேர்தல் எனும் 'லிட்மஸ் சோதனையை' நடத்திப் பார்க்குமாறும் அவர் சவால் விடுத்தார்.அந்தத் தேர்தலை நடத்தும் பட்சத்தில், கடந்த பொதுத் தேர்தலில் அரசுக்குக் கிடைத்த விசேட மக்கள் ஆணைக்குத் தற்போது என்ன நேர்ந்துள்ளது என்பதை அவர்களால் துல்லியமாகக் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.வெறுமனே பொய்யான காரணங்களைக் கூறித் தெரிவுக்குழுக்களை அமைத்துத் தொடர்ந்தும் காலம் கடத்தாமல், வரவு - செலவுத் திட்டம் முடிந்தவுடனேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் மேலும் வலியுறுத்தினார்.