பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், இதுவரை 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது விருப்பத்தைத் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (27) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ், கீழ்நிலைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முதல் பொலிஸ் பரிசோதகர்கள் வரையிலான உத்தியோகத்தர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்காகச் செலுத்த வேண்டிய வரித் தொகையைப் பொலிஸ் திணைக்களத்தின் வெகுமதி நிதியத்திலிருந்து ஈடுசெய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள்களைக் கொள்வனவு செய்வதற்கு உத்தியோகத்தர்களுக்கு வட்டியற்ற கடன் வசதியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், ஆரம்பக்கட்ட நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, மிகக் குறுகிய காலத்திற்குள் மின்சார மோட்டார் சைக்கிள்களைப் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் கையளிக்க முடியும் எனத் தாம் நம்புவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
65,000 பொலிஸார் விண்ணப்பம் எப்போது கிடைக்கும் மின்சார மோட்டார் சைக்கிள்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், இதுவரை 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது விருப்பத்தைத் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.இன்று (27) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்தத் திட்டத்தின் கீழ், கீழ்நிலைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முதல் பொலிஸ் பரிசோதகர்கள் வரையிலான உத்தியோகத்தர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதற்காகச் செலுத்த வேண்டிய வரித் தொகையைப் பொலிஸ் திணைக்களத்தின் வெகுமதி நிதியத்திலிருந்து ஈடுசெய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள்களைக் கொள்வனவு செய்வதற்கு உத்தியோகத்தர்களுக்கு வட்டியற்ற கடன் வசதியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், ஆரம்பக்கட்ட நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.எனவே, மிகக் குறுகிய காலத்திற்குள் மின்சார மோட்டார் சைக்கிள்களைப் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் கையளிக்க முடியும் எனத் தாம் நம்புவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.