• May 21 2026

நுவரெலியாவில் தொடரும் கனமழை - நீர்த்தேக்கங்களின் நீர்வரத்து அதிகரிப்பு!

shanu / May 20th 2026, 5:04 pm
image

நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.


கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.


நீர்த்தேக்கங்களின் நீர் அதிகரிப்பு தொடர்பில் இன்று  காலை 8.30 மணிக்கு   நீர் மின் உற்பத்தி நிலைய அதிகாரிகள் சில தகவல்களை வழங்கியுள்ளனர். 


அதில் மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 33 அடி நிரம்ப வேண்டியுள்ளது. 


விமல் சுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 2 அடி நிரம்ப வேண்டியுள்ளது. 


மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 2.06 மீட்டர் நிரம்ப வேண்டியுள்ளது. 


காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் அதன் கொள்ளளவை விட இன்னும் 23.06 அடி நிரம்ப வேண்டியுள்ளது, லக்சபான நீர் தேக்க தத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 10.06 அடி நிரம்ப வேண்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியாவில் தொடரும் கனமழை - நீர்த்தேக்கங்களின் நீர்வரத்து அதிகரிப்பு நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.நீர்த்தேக்கங்களின் நீர் அதிகரிப்பு தொடர்பில் இன்று  காலை 8.30 மணிக்கு   நீர் மின் உற்பத்தி நிலைய அதிகாரிகள் சில தகவல்களை வழங்கியுள்ளனர். அதில் மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 33 அடி நிரம்ப வேண்டியுள்ளது. விமல் சுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 2 அடி நிரம்ப வேண்டியுள்ளது. மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 2.06 மீட்டர் நிரம்ப வேண்டியுள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் அதன் கொள்ளளவை விட இன்னும் 23.06 அடி நிரம்ப வேண்டியுள்ளது, லக்சபான நீர் தேக்க தத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 10.06 அடி நிரம்ப வேண்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement