• May 05 2026

வரிகளை திணிப்பதன் மூலம் மட்டும் வளர்ச்சியை ஏற்படுத்திவிட முடியாது! எதிர்க்கட்சித் தலைவர் விசனம்!

Chithra / May 4th 2026, 2:41 pm
image

அரசாங்கம் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்னெடுத்துள்ள வரி அதிகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,


ஜூலை 1 முதல் அரசாங்கம் பெருமதி சேர் வரி (VAT) வலையமைப்பை விரிவுபடுத்துவதுடன், வரி விகிதங்களை அதிகரிப்பதையும், வரி அமுலாக்கத்தை மிகக் கடுமையாக்குவதையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கவுள்ளது.


இந்த நடவடிக்கையினால் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்கள் பாதிக்கப்படுவதுடன், நிதிச் சேவைகளுக்கு அதிக வரி விதிக்கப்படவுள்ளது. மேலும், டிஜிட்டல் பொருளாதாரமும் இந்த வரி வலைக்குள் கொண்டுவரப்படவுள்ளதுடன், வரி இணக்கப்பாட்டுச் சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இது பொருளாதாரச் சீர்திருத்தம் அல்ல இது ஒரு வகையான பிழிந்தெடுப்பு ஆகும். ஒரு பொருளாதாரத்தின் மீது வரிகளை திணிப்பதன் மூலம் மட்டும் வளர்ச்சியை ஏற்படுத்திவிட முடியாது.


வணிக நிறுவனங்களால் நிம்மதியாகச் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டால், அவை நிலைத்து நிற்கவோ அல்லது வளர்ச்சியடையவோ முடியாது. வணிக நிறுவனங்களே அழிந்துவிட்டால், இறுதியில் வரி வசூலிப்பதற்கு எஞ்சியிருக்கப் போவது என்ன?' என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரிகளை திணிப்பதன் மூலம் மட்டும் வளர்ச்சியை ஏற்படுத்திவிட முடியாது எதிர்க்கட்சித் தலைவர் விசனம் அரசாங்கம் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்னெடுத்துள்ள வரி அதிகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,ஜூலை 1 முதல் அரசாங்கம் பெருமதி சேர் வரி (VAT) வலையமைப்பை விரிவுபடுத்துவதுடன், வரி விகிதங்களை அதிகரிப்பதையும், வரி அமுலாக்கத்தை மிகக் கடுமையாக்குவதையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கவுள்ளது.இந்த நடவடிக்கையினால் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்கள் பாதிக்கப்படுவதுடன், நிதிச் சேவைகளுக்கு அதிக வரி விதிக்கப்படவுள்ளது. மேலும், டிஜிட்டல் பொருளாதாரமும் இந்த வரி வலைக்குள் கொண்டுவரப்படவுள்ளதுடன், வரி இணக்கப்பாட்டுச் சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இது பொருளாதாரச் சீர்திருத்தம் அல்ல இது ஒரு வகையான பிழிந்தெடுப்பு ஆகும். ஒரு பொருளாதாரத்தின் மீது வரிகளை திணிப்பதன் மூலம் மட்டும் வளர்ச்சியை ஏற்படுத்திவிட முடியாது.வணிக நிறுவனங்களால் நிம்மதியாகச் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டால், அவை நிலைத்து நிற்கவோ அல்லது வளர்ச்சியடையவோ முடியாது. வணிக நிறுவனங்களே அழிந்துவிட்டால், இறுதியில் வரி வசூலிப்பதற்கு எஞ்சியிருக்கப் போவது என்ன' என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement