• Oct 14 2026

இலங்கையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடா? அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Chithra / Oct 14th 2026, 10:23 am
image


இலங்கை சந்தையில் எவ்வித எரிவாயு தட்டுப்பாடும் இல்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று மாலைத்தீவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


குறித்த கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், எவ்வித தடையுமின்றி விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்துக்கு 2027ஆம் ஆண்டுக்கான திரவ பெற்றோலிய வாயுவை (LPG) விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை சவூதி அரம்கோ நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இதன்படி, 2027ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 12 மாத காலத்திற்கு 420,000 மெற்றிக் தொன் எரிவாயுவை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது.


இந்த அளவில் 20 சதவீதம் வரை மாற்றம் மேற்கொள்ள முடியும் என்பதுடன், குறைந்தபட்சமாக 336,000 மெற்றிக் தொன் எரிவாயு விநியோகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும், காப்புறுதி மற்றும் கப்பல் போக்குவரத்துக் கட்டணங்கள் உள்ளடங்கலாக, ஒரு மெற்றிக் தொன்னுக்கு 133.93 அமெரிக்க டொலர் என்ற ஒப்பந்த விலையில் எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளது.


இந்நிலையில், நாட்டில் எரிவாயு விநியோகம் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடா அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இலங்கை சந்தையில் எவ்வித எரிவாயு தட்டுப்பாடும் இல்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று மாலைத்தீவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.குறித்த கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், எவ்வித தடையுமின்றி விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்துக்கு 2027ஆம் ஆண்டுக்கான திரவ பெற்றோலிய வாயுவை (LPG) விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை சவூதி அரம்கோ நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதன்படி, 2027ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 12 மாத காலத்திற்கு 420,000 மெற்றிக் தொன் எரிவாயுவை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது.இந்த அளவில் 20 சதவீதம் வரை மாற்றம் மேற்கொள்ள முடியும் என்பதுடன், குறைந்தபட்சமாக 336,000 மெற்றிக் தொன் எரிவாயு விநியோகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், காப்புறுதி மற்றும் கப்பல் போக்குவரத்துக் கட்டணங்கள் உள்ளடங்கலாக, ஒரு மெற்றிக் தொன்னுக்கு 133.93 அமெரிக்க டொலர் என்ற ஒப்பந்த விலையில் எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளது.இந்நிலையில், நாட்டில் எரிவாயு விநியோகம் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement