மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் இன்று (02.10.2026) காலை அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கார்கில் சதுக்கத்தில் (Cargill Square) நடைபெற்ற இந்நிகழ்வை இந்திய துணைத் தூதரகமும் சாந்தி சேவா சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அவரது அகிம்சை, உண்மை, அமைதி மற்றும் மனிதநேயக் கொள்கைகள் நினைவுகூரப்பட்டன.
நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், சமயத் தலைவர்கள், சாந்தி சேவா சங்கத்தின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில், அவரது அகிம்சை மற்றும் அமைதிக்கான வாழ்வியல் கொள்கைகளை நினைவுகூரும் வகையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தியின் பிறந்த தினமான ஒக்டோபர் 2ஆம் திகதி, ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியாக நினைவுகூரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காந்தி ஜெயந்தி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் இன்று (02.10.2026) காலை அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கார்கில் சதுக்கத்தில் (Cargill Square) நடைபெற்ற இந்நிகழ்வை இந்திய துணைத் தூதரகமும் சாந்தி சேவா சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.இதன்போது மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அவரது அகிம்சை, உண்மை, அமைதி மற்றும் மனிதநேயக் கொள்கைகள் நினைவுகூரப்பட்டன.நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், சமயத் தலைவர்கள், சாந்தி சேவா சங்கத்தின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில், அவரது அகிம்சை மற்றும் அமைதிக்கான வாழ்வியல் கொள்கைகளை நினைவுகூரும் வகையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மகாத்மா காந்தியின் பிறந்த தினமான ஒக்டோபர் 2ஆம் திகதி, ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியாக நினைவுகூரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.