• Apr 28 2026

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அடுத்தடுத்து வரும் விமானங்கள்

Chithra / Dec 3rd 2025, 1:02 pm
image

இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவுவதற்காக  ஐக்கிய அரபு இராச்சியத்தில்  இருந்து மனிதாபிமான நான்காவது  உதவி நிவாரணங்கள் அடங்கிய  C -17  விமானம்  நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து . 

மீட்பு நடவடிக்கைகளுக்காக விசேட  பயிற்சி பெற்ற 53 அபுதாபி சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள், புதைக்கப்பட்ட இடங்களில் மனித சடலங்களை தேடும் திறன் கொண்ட மோப்ப  நாய்கள், அவற்றைக் கொண்டு செல்லும் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பல வாகனங்கள் இந்த விமானத்தில் இருந்தன.

அவர்களை வரவேற்க இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர்  காலித் நாசர் அல் அமேரி, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் குழுவினரும் வருகைதந்திருந்தனர்.

இந்த நெருக்கடியான நேரத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம்  வழங்கிய அவசர ஆதரவிற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அடுத்தடுத்து வரும் விமானங்கள் இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவுவதற்காக  ஐக்கிய அரபு இராச்சியத்தில்  இருந்து மனிதாபிமான நான்காவது  உதவி நிவாரணங்கள் அடங்கிய  C -17  விமானம்  நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து . மீட்பு நடவடிக்கைகளுக்காக விசேட  பயிற்சி பெற்ற 53 அபுதாபி சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள், புதைக்கப்பட்ட இடங்களில் மனித சடலங்களை தேடும் திறன் கொண்ட மோப்ப  நாய்கள், அவற்றைக் கொண்டு செல்லும் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பல வாகனங்கள் இந்த விமானத்தில் இருந்தன.அவர்களை வரவேற்க இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர்  காலித் நாசர் அல் அமேரி, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் குழுவினரும் வருகைதந்திருந்தனர்.இந்த நெருக்கடியான நேரத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம்  வழங்கிய அவசர ஆதரவிற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement