நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் தவிர்த்து வந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இறுதியில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவருக்கு அடுத்ததாக என்ன நடந்தது?
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஞானசார தேரரை, நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், அவரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்லாம் மார்க்கத்தையும் திருக்குர்ஆனையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
களுத்துறை பிட்டிகல பகுதியில் உள்ள லேனகிரிய ஆரண்ய சேனாசனத்தில் மறைந்திருந்த நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு முன்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பை இரத்து செய்து, சிறைத்தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றமும் திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தது
இறுதியில் சிக்கிய ஞானசார தேரர் அடுத்து நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் தவிர்த்து வந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இறுதியில் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட அவருக்கு அடுத்ததாக என்ன நடந்ததுகொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஞானசார தேரரை, நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையில், அவரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.இஸ்லாம் மார்க்கத்தையும் திருக்குர்ஆனையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.களுத்துறை பிட்டிகல பகுதியில் உள்ள லேனகிரிய ஆரண்ய சேனாசனத்தில் மறைந்திருந்த நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அவருக்கு முன்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பை இரத்து செய்து, சிறைத்தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றமும் திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தது