வவுனியா, பாலமோட்டை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம், மடத்துவிளாங்குளம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த பெரிய விவசாயக் கிணறு ஒன்றிற்குள் காட்டு யானை ஒன்று விழுந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானையே, எதிர்பாராத விதமாக இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது. காலையில் அவ்வழியாகச் சென்ற கிராம மக்கள், கிணற்றுக்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டுப் பார்த்தபோதே யானை உள்ளே தத்தளித்துக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக பாலமோட்டை கிராம அலுவலருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். கிராம அலுவலரின் அறிவித்தலைத் தொடர்ந்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தற்போது கிணற்றுக்குள் விழுந்துள்ள யானையை காயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பாக மீட்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிணற்றின் ஒரு பகுதியை மண் அகழ்வு இயந்திரம் (JCB) மூலம் தோண்டி, யானை மேலே ஏறி வருவதற்கு ஏதுவான பாதையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியாவில் கைவிடப்பட்ட கிணற்றுக்குள் விழுந்த யானை: மீட்புப் பணிகள் தீவிரம் வவுனியா, பாலமோட்டை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம், மடத்துவிளாங்குளம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த பெரிய விவசாயக் கிணறு ஒன்றிற்குள் காட்டு யானை ஒன்று விழுந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானையே, எதிர்பாராத விதமாக இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது. காலையில் அவ்வழியாகச் சென்ற கிராம மக்கள், கிணற்றுக்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டுப் பார்த்தபோதே யானை உள்ளே தத்தளித்துக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக பாலமோட்டை கிராம அலுவலருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். கிராம அலுவலரின் அறிவித்தலைத் தொடர்ந்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.தற்போது கிணற்றுக்குள் விழுந்துள்ள யானையை காயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பாக மீட்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிணற்றின் ஒரு பகுதியை மண் அகழ்வு இயந்திரம் (JCB) மூலம் தோண்டி, யானை மேலே ஏறி வருவதற்கு ஏதுவான பாதையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.