• Jul 01 2026

யாழில் கேக் கிரவுன் போட்டி: கண்டி பெண் முதலிடம்

Chithra / Jul 1st 2026, 1:06 pm
image


யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேக் தயாரிப்பு போட்டியில் கண்டியை சேர்ந்த பெரேரா எனும் பெண்மணி முதலிடத்தை பெற்றுக்கொண்டதுடன் , ஒரு இலட்ச ரூபாய் பண பரிசிலையும் பெற்றுக்கொண்டுள்ளார். 


Jaffna City Hotel இன் ஏற்பாட்டில் "CAKE CROWN COMPETITION 2026" எனும் கேக் தயாரிப்பு போட்டி அண்மையில் Jaffna City Hotel இல் நடைபெற்றது. 


குறித்த போட்டியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று , தமது திறமைகளை வெளிக்காட்டினர். 


அதில் கண்டியை சேர்ந்த பெண் முதலிடத்தையும், ஒரு இலட்ச ரூபாய் பண பரிசினையும், இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பெற்றுக்கொண்டதுடன், 50 ஆயிரம் ரூபாய் பண பரிசினையும் பெற்றார், 


மூன்றாம் இடத்தை பெற்றவர் 25 ஆயிரம் ரூபாய் பண பரிசையும் பெற்றுக்கொண்டனர். 


அத்துடன் பங்குபற்றிய அனைவருக்கும் ஆறுதல் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அவர்களை ஊக்குவிக்கும் முகமாக 10 ஆயிரம் ரூபாய் பண பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. 


யாழில் கேக் கிரவுன் போட்டி: கண்டி பெண் முதலிடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேக் தயாரிப்பு போட்டியில் கண்டியை சேர்ந்த பெரேரா எனும் பெண்மணி முதலிடத்தை பெற்றுக்கொண்டதுடன் , ஒரு இலட்ச ரூபாய் பண பரிசிலையும் பெற்றுக்கொண்டுள்ளார். Jaffna City Hotel இன் ஏற்பாட்டில் "CAKE CROWN COMPETITION 2026" எனும் கேக் தயாரிப்பு போட்டி அண்மையில் Jaffna City Hotel இல் நடைபெற்றது. குறித்த போட்டியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று , தமது திறமைகளை வெளிக்காட்டினர். அதில் கண்டியை சேர்ந்த பெண் முதலிடத்தையும், ஒரு இலட்ச ரூபாய் பண பரிசினையும், இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பெற்றுக்கொண்டதுடன், 50 ஆயிரம் ரூபாய் பண பரிசினையும் பெற்றார், மூன்றாம் இடத்தை பெற்றவர் 25 ஆயிரம் ரூபாய் பண பரிசையும் பெற்றுக்கொண்டனர். அத்துடன் பங்குபற்றிய அனைவருக்கும் ஆறுதல் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அவர்களை ஊக்குவிக்கும் முகமாக 10 ஆயிரம் ரூபாய் பண பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement