அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக இன்று தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
அவர் சுப நேரத்தில் தனது பதவியை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்பு சப்ரகமுவ மாகாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட நூரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக அவர் பணியாற்றியிருந்தார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் தற்போது சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஸ்தாபக பொறுப்பதிகாரியாக பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன், கடந்த 23ஆம் திகதி தனது 38 வருட சேவையை நிறைவு செய்து ஓய்வுபெற்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பதில் பொறுப்பதிகாரியாக செயல்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஏ.ஜே.டி. சில்வாவும் இடமாற்றம் பெற்று சென்ற நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே தற்போது டி.எஸ்.இந்திக நியமிக்கப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக டி.எஸ்.இந்திக பதவியேற்பு அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக இன்று தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.அவர் சுப நேரத்தில் தனது பதவியை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்பு சப்ரகமுவ மாகாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட நூரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக அவர் பணியாற்றியிருந்தார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் தற்போது சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு முன் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஸ்தாபக பொறுப்பதிகாரியாக பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன், கடந்த 23ஆம் திகதி தனது 38 வருட சேவையை நிறைவு செய்து ஓய்வுபெற்றிருந்தார்.அதனைத் தொடர்ந்து பதில் பொறுப்பதிகாரியாக செயல்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஏ.ஜே.டி. சில்வாவும் இடமாற்றம் பெற்று சென்ற நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே தற்போது டி.எஸ்.இந்திக நியமிக்கப்பட்டுள்ளார்.