• Jun 27 2026

இளைஞர்களை குறிவைக்கும் போதைப்பொருள் அபாயம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள்

Chithra / Jun 26th 2026, 12:14 pm
image


சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருகோணமலை வலயத்திற்குட்பட்ட கிண்ணியா அல் மீனா வித்யாலயம் ஏற்பாடு செய்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும் வீதி நாடகமும் இன்று  நடைபெற்றது.


பாடசாலை அதிபர் எம்.வை.ஹதியத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, 'போதையின் உச்சம் தற்காலிகம், சேதம் நிரந்தரம்'எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


விழிப்புணர்வு பேரணியானது பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமாகி, பிரதான வீதி வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பயணித்து, மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது. 


இந்த ஊர்வலத்தின் போது, போதைப்பொருள் பாவனையின் ஆபத்துக்கள் மற்றும் சமூகச் சீரழிவுகளை விளக்கும் வகையில் மாணவர்கள் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.


தொடர்ந்து, இன்றைய இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதால் அவர்களது குடும்பங்களிலும், சமூகத்திலும் ஏற்படும் விபரீதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் மன உளைச்சல்களைத் தத்ரூபமாக விவரிக்கும் விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றும் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. 


பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்த இந்நாடகம், போதைக்கு எதிரான வலுவான செய்தியைச் சமூகத்திற்கு வழங்கியது.


இந்நிகழ்வின் இறுதிக்கட்டமாக, போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் அதிபர் மற்றும் ஆசிரியர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டன.



இதேவேளை , சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கந்தளாய் பகுதியில்  இன்று (26) விசேட விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்வு கந்தளாய் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உப்புள் பி. சேனவிரத்னவின் தலைமையில் நடைபெற்றது.


பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் கந்தளாய் பேருந்து நிலையம் மற்றும் பொதுச் சந்தை ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 


இதன்போது, பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் சாரதிகளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.


விநியோகிக்கப்பட்ட பிரசுரங்களில், போதைப்பொருள் பாவனை சமூகத்திலும் குடும்பங்களிலும் ஏற்படுத்தும் தீவிர பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டிருந்ததுடன், குறிப்பாக நாட்டின் எதிர்காலமாகக் கருதப்படும் பாடசாலை மாணவர்களும் போதைப்பொருள் வலையில் சிக்கி வருவது கவலைக்கிடமான நிலையாக சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், இது தேசிய மட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன், போதைப்பொருள் ஆபத்து ஆண், பெண், இளைஞர், முதியவர், பணக்காரர், ஏழை என்ற எந்தப் பாகுபாடும் இன்றி அனைவரையும் பாதித்து வருவதால், இதனை ஒழிப்பதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.


போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு, தகவல்களை உரிய அதிகாரிகளிடம் பகிர்ந்து ஒத்துழைக்குமாறும் இதன்போது பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.


இளைஞர்களை குறிவைக்கும் போதைப்பொருள் அபாயம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருகோணமலை வலயத்திற்குட்பட்ட கிண்ணியா அல் மீனா வித்யாலயம் ஏற்பாடு செய்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும் வீதி நாடகமும் இன்று  நடைபெற்றது.பாடசாலை அதிபர் எம்.வை.ஹதியத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, 'போதையின் உச்சம் தற்காலிகம், சேதம் நிரந்தரம்'எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விழிப்புணர்வு பேரணியானது பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமாகி, பிரதான வீதி வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பயணித்து, மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தின் போது, போதைப்பொருள் பாவனையின் ஆபத்துக்கள் மற்றும் சமூகச் சீரழிவுகளை விளக்கும் வகையில் மாணவர்கள் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.தொடர்ந்து, இன்றைய இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதால் அவர்களது குடும்பங்களிலும், சமூகத்திலும் ஏற்படும் விபரீதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் மன உளைச்சல்களைத் தத்ரூபமாக விவரிக்கும் விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றும் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்த இந்நாடகம், போதைக்கு எதிரான வலுவான செய்தியைச் சமூகத்திற்கு வழங்கியது.இந்நிகழ்வின் இறுதிக்கட்டமாக, போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் அதிபர் மற்றும் ஆசிரியர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டன.இதேவேளை , சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கந்தளாய் பகுதியில்  இன்று (26) விசேட விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வு கந்தளாய் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உப்புள் பி. சேனவிரத்னவின் தலைமையில் நடைபெற்றது.பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் கந்தளாய் பேருந்து நிலையம் மற்றும் பொதுச் சந்தை ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் சாரதிகளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.விநியோகிக்கப்பட்ட பிரசுரங்களில், போதைப்பொருள் பாவனை சமூகத்திலும் குடும்பங்களிலும் ஏற்படுத்தும் தீவிர பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டிருந்ததுடன், குறிப்பாக நாட்டின் எதிர்காலமாகக் கருதப்படும் பாடசாலை மாணவர்களும் போதைப்பொருள் வலையில் சிக்கி வருவது கவலைக்கிடமான நிலையாக சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், இது தேசிய மட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், போதைப்பொருள் ஆபத்து ஆண், பெண், இளைஞர், முதியவர், பணக்காரர், ஏழை என்ற எந்தப் பாகுபாடும் இன்றி அனைவரையும் பாதித்து வருவதால், இதனை ஒழிப்பதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு, தகவல்களை உரிய அதிகாரிகளிடம் பகிர்ந்து ஒத்துழைக்குமாறும் இதன்போது பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement