• Apr 27 2026

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பம் குறித்த சந்தேகம் - வெளியான தொலைபேசி இலக்கம்

Chithra / Oct 3rd 2025, 8:46 am
image


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 09ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 

அன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையவழி விண்ணப்ப முறை மூடப்படும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

எக் காரணத்தைக் கொண்டும் இந்த இறுதி திகதி நீடிக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 18ஆம் திகதி முதலே சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையவழியினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இது தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 0112-784208, 0112-784537, 0112-785922 மேற்படி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0112-784422 எனும் தொலைநகல் எண் அல்லது gceolexansl@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் வினவ முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பம் குறித்த சந்தேகம் - வெளியான தொலைபேசி இலக்கம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 09ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையவழி விண்ணப்ப முறை மூடப்படும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எக் காரணத்தைக் கொண்டும் இந்த இறுதி திகதி நீடிக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.செப்டெம்பர் 18ஆம் திகதி முதலே சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையவழியினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 0112-784208, 0112-784537, 0112-785922 மேற்படி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.0112-784422 எனும் தொலைநகல் எண் அல்லது gceolexansl@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் வினவ முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement