மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்தனர்.
இன்று காலை 8 மணி முதல் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் பணி புரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் நீதி கோரி பணி பகிஸ்கரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக வைத்திய சாலைக்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று கொள்ள வந்த நோயாளர்கள் அவதி அடைந்து நிலையில் வீடு திரும்பினார்.
வெளிநோயாளர் பிரிவை தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் இடம் பெற்று வருகின்றன.
கடந்த 28ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் நோயாளிகள் பார்க்கும் நேரம் முடிந்து விட்ட நிலையில் வைத்தியசாலையில் தகாத முறையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து அந்த பெண் ஊழியர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ள போதிலும் இன்றைய தினம் வரை சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யாத காரணத்தால் இந்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இவ்வாறான செயல்கள் இடம்பெற்று வருவதால் குறித்த செயல்களைக் கண்டித்து இந்த பணி பகிஸ்கரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய நோயாளிகள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்தனர். இன்று காலை 8 மணி முதல் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் பணி புரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் நீதி கோரி பணி பகிஸ்கரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.இதன் காரணமாக வைத்திய சாலைக்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று கொள்ள வந்த நோயாளர்கள் அவதி அடைந்து நிலையில் வீடு திரும்பினார்.வெளிநோயாளர் பிரிவை தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் இடம் பெற்று வருகின்றன.கடந்த 28ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் நோயாளிகள் பார்க்கும் நேரம் முடிந்து விட்ட நிலையில் வைத்தியசாலையில் தகாத முறையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து அந்த பெண் ஊழியர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ள போதிலும் இன்றைய தினம் வரை சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யாத காரணத்தால் இந்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இவ்வாறான செயல்கள் இடம்பெற்று வருவதால் குறித்த செயல்களைக் கண்டித்து இந்த பணி பகிஸ்கரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.