இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்பத் தகராறின்போது மனைவி மீது வளர்ப்பு நாயை ஏவிக் கடிக்க வைத்த கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி அருகேயுள்ள ஆலங்காடு பகுதியைச் சேர்ந்த 55 வயதான சினி என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அவரது கணவர் சுனில் ஜோசப், வீட்டில் பிட்புல் ரக நாயை வளர்த்து வந்துள்ளார்.
கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின்போது, ஆத்திரமடைந்த சுனில் ஜோசப் மனைவியின் தொலைபேசியைப் பறித்து உடைத்துள்ளார். இதுகுறித்து சினி அயலவர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் வீட்டுக்கு வந்து சுனில் ஜோசப்பிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர், மனைவியை மூக்கில் குத்தியும், தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சுவரில் தலையை மோதச் செய்தும் தாக்கியுள்ளார். இதையடுத்து, தான் வளர்த்து வந்த பிட்புல் நாயையும் மனைவி மீது ஏவிவிட்டுள்ளார்.
நாய் கடித்ததில் சினியின் தலை மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அயலவர்களின் உதவியுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
சினி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சுனில் ஜோசப்பைக் கைது செய்துள்ளனர். அவர் மீது காயம் ஏற்படுத்துதல், கடுமையான காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல் மற்றும் விலங்கைப் பயன்படுத்திக் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொலைபேசியை உடைத்ததால் ஏற்பட்ட தகராறு இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்பத் தகராறின்போது மனைவி மீது வளர்ப்பு நாயை ஏவிக் கடிக்க வைத்த கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி அருகேயுள்ள ஆலங்காடு பகுதியைச் சேர்ந்த 55 வயதான சினி என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அவரது கணவர் சுனில் ஜோசப், வீட்டில் பிட்புல் ரக நாயை வளர்த்து வந்துள்ளார்.கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின்போது, ஆத்திரமடைந்த சுனில் ஜோசப் மனைவியின் தொலைபேசியைப் பறித்து உடைத்துள்ளார். இதுகுறித்து சினி அயலவர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் வீட்டுக்கு வந்து சுனில் ஜோசப்பிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர், மனைவியை மூக்கில் குத்தியும், தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சுவரில் தலையை மோதச் செய்தும் தாக்கியுள்ளார். இதையடுத்து, தான் வளர்த்து வந்த பிட்புல் நாயையும் மனைவி மீது ஏவிவிட்டுள்ளார்.நாய் கடித்ததில் சினியின் தலை மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அயலவர்களின் உதவியுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.சினி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சுனில் ஜோசப்பைக் கைது செய்துள்ளனர். அவர் மீது காயம் ஏற்படுத்துதல், கடுமையான காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல் மற்றும் விலங்கைப் பயன்படுத்திக் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.