• Apr 23 2026

புத்தளத்தில் பாதுகாப்பு, போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

shanu / Mar 7th 2026, 9:49 pm
image

புத்தளம் - ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட அல்காசிமி சிட்டி பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமான விஷேட கலந்துரையாடலொன்று நேற்று வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றது.


வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் அல்காசிமி சிட்டி ஜூம்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் பொலிஸ் தரப்பில் புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.சந்திரசேன, புத்தளம் தலைமையக பொலிஸ் நிலைய சிறு குற்றங்கள் பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச்.ஐ.எம்.பிரேமதிலக உட்பட போக்குவரத்து பொலிஸாரும் கலந்துகொண்டனர்.


மேலும், அல்காசிமி சிட்டி ஜூம்ஆ மஸ்ஜித், முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் மற்றும் 100 வீட்டுத்திட்டம் ஜூம்ஆ மஸ்ஜித் ஆகியவற்றின் நிர்வாக சபைத் தலைவர்கள் உட்பட நிர்வாகிகளும், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் வயோதிபர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.


ரத்மல்யாய, அல்காசிமி சிட்டி பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தல் என்பவற்றை தடுக்க பிரதேச மக்களுடன் இணைந்து பொலிஸார் ,மதத் தலைவர்கள் கூட்டிணைப்பில் குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தி இளைய சமூகத்தைப் பாதுகாப்பது இதன் பிரதான நோக்கமாகும்.


இதன்போது, போதை ஒழிப்பு, பகல் மற்றும் இரவு நேரங்களில் இலக்கத்தகடுகள் , தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் சுற்றித் திரிவது, ஒரு மோட்டார் சைக்கிள்களில் நான்கு, ஐந்து பேர் பயணிப்பது, வெளிப்பகுதிகளில் இருந்து வந்து வீடு வாடகைக்கு பெறுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மூன்று கிராம மக்களும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கி கொண்டு வந்தனர்.


மேலும், அல்காசிமி சிட்டி , முல்லை ஸ்கீம் மற்றும் 100 வீட்டுத் திட்டம் ஆகிய மூன்று கிராமங்களையும் உள்ளடக்கிய வகையில் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைக்கவும் இதன்போது நடவடிக்கை எடுக்குமாறும் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.


குறித்த பொதுமக்களின் கருத்துக்களை மிகவும் கவனமாக கேட்டறிந்துகொண்ட புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.சந்திரசேன உரையாற்றுகையில், 


புத்தளம் மாவட்டத்தில் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புத்தளத்தில் இருந்து போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையை முழுமையாக கட்டுபடுத்த வேண்டும் என்பதில் இங்கு வாழும் மூவின மக்களும் ஒருமித்த கருத்துடன் இருக்கிறார்கள்.


எனவே, போதைப் பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பொலிஸாருடன் இணைந்து பொதுமக்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.


உங்கள் கிராமங்களில் அறிமுகம் இல்லாதவர்கள் வந்து வீட்டை வாடகைக்கு கேட்டால் அவர்கள் தொடர்பில் மிகவும் கவனமாக இருந்துகொள்ளுங்கள். அவர்கள் தொடர்பாக முழுமையான தகவல்லகளை பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்து அவர்களை குடியமர்வதற்கு அனுமதியுங்கள்.


மாத்திரமன்றி, போதை பாவனை மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக தனிநபராக இன்றி ஒரு சமூகமாக உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள். அவர்களை அடையாளப்படுத்தி அவர்கள் பற்றி சமூகத்திற்கு தெரியப்படுத்துங்கள். 


போதை பொருள் பாவனையாளர்களையும் விற்பனையாளர்களையும் ஒருபோதும் பாதுகாக்க முயற்சி செய்யாதீர்கள்.  இது எமக்கு தேவையில்லாத வேலை என்று ஒருபோதும் ஒதுங்கிப் போகாதீர்கள்.


மேலும், போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை செய்யும் நபர்கள் தொடர்பில் சரியான தகவல்களை எனக்குத் தெரியப்படுத்துங்கள். போதைப் பொருள் வியாபார சண்டியர்களை என்ன செய்ய வேண்டுமோ அதனை நான் பார்த்துக்கொள்கிறேன்.


மேலும், உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அக்கறை காட்டுங்கள். சிறுவயதில் இருந்து பிள்ளைகளை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். பிள்ளைகள் மிகப் பெரிய சொத்தாகும். அவர்களை வழிகேட்டுக்குள் தள்ளிவிட சில சந்தர்ப்பங்களில் பெற்றோர்களே காரணமாகி விடுகின்றனர்.


மேலும், இந்தக் கிராமத்தில் இருந்து போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு இங்கு போதை ஒழிப்பு குழுவொன்றை நிறுவுங்கள்.


அவர்களுக்கு பித்தியேகமாக அடையாள அட்டையை ஒன்றை வழங்கி உங்கள் கிராமத்தில் உள்ள போதைப் பொருள் பாவனையையும், விற்பனையையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். தேவைப்படும் சந்தர்ப்பங்களில் உதவிக்கு புத்தளம் பொலிஸாரை அல்லது பிரதிப் பொலிஸ் மா அதிபரை எந்த நேரமும் தொடர்புகொள்ளலாம் என்றார்.


இந்தக் கலந்துரையாடலில் அல்காசிமி சிட்டி, 100 வீட்டுத் திட்டம் மற்றும் முல்லை ஸ்கீம் கிராமத்தின் பாதுகாப்பு தொடர்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் பாதுகாப்பு, போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் புத்தளம் - ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட அல்காசிமி சிட்டி பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமான விஷேட கலந்துரையாடலொன்று நேற்று வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றது.வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் அல்காசிமி சிட்டி ஜூம்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் பொலிஸ் தரப்பில் புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.சந்திரசேன, புத்தளம் தலைமையக பொலிஸ் நிலைய சிறு குற்றங்கள் பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச்.ஐ.எம்.பிரேமதிலக உட்பட போக்குவரத்து பொலிஸாரும் கலந்துகொண்டனர்.மேலும், அல்காசிமி சிட்டி ஜூம்ஆ மஸ்ஜித், முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் மற்றும் 100 வீட்டுத்திட்டம் ஜூம்ஆ மஸ்ஜித் ஆகியவற்றின் நிர்வாக சபைத் தலைவர்கள் உட்பட நிர்வாகிகளும், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் வயோதிபர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.ரத்மல்யாய, அல்காசிமி சிட்டி பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தல் என்பவற்றை தடுக்க பிரதேச மக்களுடன் இணைந்து பொலிஸார் ,மதத் தலைவர்கள் கூட்டிணைப்பில் குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தி இளைய சமூகத்தைப் பாதுகாப்பது இதன் பிரதான நோக்கமாகும்.இதன்போது, போதை ஒழிப்பு, பகல் மற்றும் இரவு நேரங்களில் இலக்கத்தகடுகள் , தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் சுற்றித் திரிவது, ஒரு மோட்டார் சைக்கிள்களில் நான்கு, ஐந்து பேர் பயணிப்பது, வெளிப்பகுதிகளில் இருந்து வந்து வீடு வாடகைக்கு பெறுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மூன்று கிராம மக்களும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கி கொண்டு வந்தனர்.மேலும், அல்காசிமி சிட்டி , முல்லை ஸ்கீம் மற்றும் 100 வீட்டுத் திட்டம் ஆகிய மூன்று கிராமங்களையும் உள்ளடக்கிய வகையில் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைக்கவும் இதன்போது நடவடிக்கை எடுக்குமாறும் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.குறித்த பொதுமக்களின் கருத்துக்களை மிகவும் கவனமாக கேட்டறிந்துகொண்ட புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.சந்திரசேன உரையாற்றுகையில், புத்தளம் மாவட்டத்தில் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புத்தளத்தில் இருந்து போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையை முழுமையாக கட்டுபடுத்த வேண்டும் என்பதில் இங்கு வாழும் மூவின மக்களும் ஒருமித்த கருத்துடன் இருக்கிறார்கள்.எனவே, போதைப் பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பொலிஸாருடன் இணைந்து பொதுமக்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.உங்கள் கிராமங்களில் அறிமுகம் இல்லாதவர்கள் வந்து வீட்டை வாடகைக்கு கேட்டால் அவர்கள் தொடர்பில் மிகவும் கவனமாக இருந்துகொள்ளுங்கள். அவர்கள் தொடர்பாக முழுமையான தகவல்லகளை பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்து அவர்களை குடியமர்வதற்கு அனுமதியுங்கள்.மாத்திரமன்றி, போதை பாவனை மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக தனிநபராக இன்றி ஒரு சமூகமாக உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள். அவர்களை அடையாளப்படுத்தி அவர்கள் பற்றி சமூகத்திற்கு தெரியப்படுத்துங்கள். போதை பொருள் பாவனையாளர்களையும் விற்பனையாளர்களையும் ஒருபோதும் பாதுகாக்க முயற்சி செய்யாதீர்கள்.  இது எமக்கு தேவையில்லாத வேலை என்று ஒருபோதும் ஒதுங்கிப் போகாதீர்கள்.மேலும், போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை செய்யும் நபர்கள் தொடர்பில் சரியான தகவல்களை எனக்குத் தெரியப்படுத்துங்கள். போதைப் பொருள் வியாபார சண்டியர்களை என்ன செய்ய வேண்டுமோ அதனை நான் பார்த்துக்கொள்கிறேன்.மேலும், உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அக்கறை காட்டுங்கள். சிறுவயதில் இருந்து பிள்ளைகளை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். பிள்ளைகள் மிகப் பெரிய சொத்தாகும். அவர்களை வழிகேட்டுக்குள் தள்ளிவிட சில சந்தர்ப்பங்களில் பெற்றோர்களே காரணமாகி விடுகின்றனர்.மேலும், இந்தக் கிராமத்தில் இருந்து போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு இங்கு போதை ஒழிப்பு குழுவொன்றை நிறுவுங்கள்.அவர்களுக்கு பித்தியேகமாக அடையாள அட்டையை ஒன்றை வழங்கி உங்கள் கிராமத்தில் உள்ள போதைப் பொருள் பாவனையையும், விற்பனையையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். தேவைப்படும் சந்தர்ப்பங்களில் உதவிக்கு புத்தளம் பொலிஸாரை அல்லது பிரதிப் பொலிஸ் மா அதிபரை எந்த நேரமும் தொடர்புகொள்ளலாம் என்றார்.இந்தக் கலந்துரையாடலில் அல்காசிமி சிட்டி, 100 வீட்டுத் திட்டம் மற்றும் முல்லை ஸ்கீம் கிராமத்தின் பாதுகாப்பு தொடர்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement