• Oct 01 2026

டீசல் விலை உயர்வு; பேருந்து கட்டணம் உயருமா?

Chithra / Oct 1st 2026, 12:56 pm
image


டீசல் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தனியார் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விலை அதிகரிப்பை காரணம் காட்டி பேருந்து கட்டணங்களை அதிகரிக்க தமது சங்கம் தயாராக இல்லை என கெமுனு விஜேரட்ன குறிப்பிட்டுள்ளார்.


தனியார் பேருந்து கட்டணங்கள் ஒரு குறிப்பிட்ட பொறிமுறையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால், தற்போதைய டீசல் விலை உயர்வினால் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


டீசல் விலை உயர்வினால் ஏற்படும் நஷ்டத்தை பேருந்து உரிமையாளர்களே ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதன்படி, குறுகிய தூர பேருந்து சேவையொன்றுக்கு நாளாந்தம் சுமார் 250 ரூபாவும், நீண்ட தூர பேருந்து சேவையொன்றுக்கு நாளாந்தம் சுமார் 1,000 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்துடன், தற்போதைய எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ் டீசல் விலை 10 ரூபாவால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மையில் இதைவிட அதிகளவில் விலை உயர்த்தப்பட்டிருக்க வேண்டிய நிலை காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அதேவேளை, அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியத்திற்காக அரசாங்கம் பெருமளவு நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும், அரசாங்கம் மானியங்களுக்காக பெருமளவு நிதியை ஒதுக்குவதற்குப் பதிலாக டீசல் விலையை 10 ரூபாவால் அதிகரிக்காமல் இருந்திருக்கலாம் எனவும் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.


மக்களும் வர்த்தகர்களும் அரச ஊழியர்களும் செலுத்தும் வரிப்பணத்திலிருந்தே அரசாங்கம் மானியங்களை வழங்குவதாகவும், மக்களின் பணத்தையே மீண்டும் மானியமாக ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.


இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய முன்னறிவிப்பாக இருக்கலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


எவ்வாறாயினும், டீசல் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை தனியார் பேருந்து கட்டணங்களில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும், பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது எனவும் கெமுனு விஜேரட்ன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

டீசல் விலை உயர்வு; பேருந்து கட்டணம் உயருமா டீசல் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தனியார் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விலை அதிகரிப்பை காரணம் காட்டி பேருந்து கட்டணங்களை அதிகரிக்க தமது சங்கம் தயாராக இல்லை என கெமுனு விஜேரட்ன குறிப்பிட்டுள்ளார்.தனியார் பேருந்து கட்டணங்கள் ஒரு குறிப்பிட்ட பொறிமுறையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால், தற்போதைய டீசல் விலை உயர்வினால் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.டீசல் விலை உயர்வினால் ஏற்படும் நஷ்டத்தை பேருந்து உரிமையாளர்களே ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இதன்படி, குறுகிய தூர பேருந்து சேவையொன்றுக்கு நாளாந்தம் சுமார் 250 ரூபாவும், நீண்ட தூர பேருந்து சேவையொன்றுக்கு நாளாந்தம் சுமார் 1,000 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன், தற்போதைய எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ் டீசல் விலை 10 ரூபாவால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மையில் இதைவிட அதிகளவில் விலை உயர்த்தப்பட்டிருக்க வேண்டிய நிலை காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதேவேளை, அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியத்திற்காக அரசாங்கம் பெருமளவு நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், அரசாங்கம் மானியங்களுக்காக பெருமளவு நிதியை ஒதுக்குவதற்குப் பதிலாக டீசல் விலையை 10 ரூபாவால் அதிகரிக்காமல் இருந்திருக்கலாம் எனவும் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.மக்களும் வர்த்தகர்களும் அரச ஊழியர்களும் செலுத்தும் வரிப்பணத்திலிருந்தே அரசாங்கம் மானியங்களை வழங்குவதாகவும், மக்களின் பணத்தையே மீண்டும் மானியமாக ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய முன்னறிவிப்பாக இருக்கலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.எவ்வாறாயினும், டீசல் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை தனியார் பேருந்து கட்டணங்களில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும், பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது எனவும் கெமுனு விஜேரட்ன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement