• Oct 15 2026

சவூதியில் மரண தண்டனை அச்சுறுத்தல்! அனோஜனைக் காப்பாற்ற ஜப்பான் தூதுவரிடம் மகஜர்

Aathira / Oct 14th 2026, 7:47 am
image

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்குத் துரித இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடாவை யாழ்ப்பாணத்தில் சந்தித்த யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ், விசேட மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அண்மையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது, அனோஜனின் உயிரைக் காப்பாற்ற சர்வதேச இராஜதந்திர வழிகளில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன், இந்த விவகாரத்தில் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் அடங்கிய ஊடக அறிக்கையின் பிரதியையும் தூதுவரிடம் கையளித்துள்ளார்.

கோரிக்கைகளைக் கவனமாகக் கேட்டறிந்த ஜப்பான் தூதுவர், இந்த விவகாரம் தொடர்பில் அக்கறை தெரிவித்ததுடன், ஜப்பான் தூதரகம் ஊடாக உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, இலங்கையில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து மகஜர்களைக் கையளிக்கும் முயற்சிகளில் என்.எம். அப்துல்லாஹ் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.

இந்தச் சந்திப்பில் யாழ். முஸ்லிம் இளைஞர் கழகத் தலைவர் எஸ்.எம். சசானும் கலந்துகொண்டார்.

சவூதியில் மரண தண்டனை அச்சுறுத்தல் அனோஜனைக் காப்பாற்ற ஜப்பான் தூதுவரிடம் மகஜர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்குத் துரித இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடாவை யாழ்ப்பாணத்தில் சந்தித்த யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ், விசேட மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார்.யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அண்மையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது, அனோஜனின் உயிரைக் காப்பாற்ற சர்வதேச இராஜதந்திர வழிகளில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்துள்ளார்.அத்துடன், இந்த விவகாரத்தில் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் அடங்கிய ஊடக அறிக்கையின் பிரதியையும் தூதுவரிடம் கையளித்துள்ளார்.கோரிக்கைகளைக் கவனமாகக் கேட்டறிந்த ஜப்பான் தூதுவர், இந்த விவகாரம் தொடர்பில் அக்கறை தெரிவித்ததுடன், ஜப்பான் தூதரகம் ஊடாக உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, இலங்கையில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து மகஜர்களைக் கையளிக்கும் முயற்சிகளில் என்.எம். அப்துல்லாஹ் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.இந்தச் சந்திப்பில் யாழ். முஸ்லிம் இளைஞர் கழகத் தலைவர் எஸ்.எம். சசானும் கலந்துகொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement