• May 18 2026

காம்பியாவில் பெண்களை அடிமைப்படுத்தும் “டபா” புகையிலைப் பழக்கம்!

Ziya / Jan 2nd 2026, 5:46 pm
image

‘டபா’ என்பது மேற்கு ஆப்பிரிக்காவில் ஆண்கள், பெண்கள் பல தசாப்தங்களாக பயன்படுத்தி வரும் புகையிலைப் பொடியாகும்.


இதை மூக்கின் வழியாக உறிஞ்சுதல், வாயில் வைத்து மெல்லுதல் அல்லது யோனிப் பாதையில் தடவி பயன்படுத்துதல் போன்ற பல முறைகளில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அனுபவிக்கின்றனர்.


பல பெண்கள் புகையிலைப் பொடியால் செய்யப்பட்ட பசையை தங்கள் யோனிப் பாதையில் வைத்துக்கொள்கின்றனர்.


ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதிலும், இதை ரகசியமாக வாங்கி பெண்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். 


காம்பியா நாடு முழுவதும் உள்ள விநியோகஸ்தர்களின் வலைப்பின்னல் மூலம் 'டபா' ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது.


குறித்த டபா புகையிலைப் பொடி  பராமரிப்பு மற்றும் விற்பனை பெரும்பாலும் பெண்கள் வழியாக நடைபெறுகிறது. 


கடந்த சில ஆண்டுகளில் 'டபா'-வின் வடிவம் மாறிவிட்டது. இப்போது இந்தப் புகையிலைப் பொடியில் பல்வேறு இதரப் பொருட்களைக் கலந்து பசையாகத் தயாரிக்கின்றனர்


ஒரு பாக்கெட்டின் விலை குறைவாகவிருந்தாலும் அதில் அதிக லாபம் உள்ளது.


டபாவை முதன்முறை யோனிப் பாதையில் பயன்படுத்துவது என்பது ஒரு பயங்கரமான அனுபவம் என்று இதனைப் பயன்படுத்தும் பெண்கள் கூறுகின்றனர்


டபாவில் உள்ள நிக்கோட்டின் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் ரசாயனங்கள் பெண்களின் உடல் மற்றும் கர்ப்பத்திற்கு தீங்கு விளைவிக்கும்.


இதனைச் சரியான முறையில் கட்டுப்படுத்தும் சட்டங்கள் காம்பியாவில் இல்லாததால், டபா பரவலாக பயன்பாட்டில் உள்ளது என ஆய்வுகள் காட்டுகின்றன.


காம்பியா அரசு 2020-லேயே டபாவை ஆபத்தானது என்று அறிவித்தது. ஆனால் சட்டங்கள் சரியாக அமல்படுத்தப்படாததால் டபா இன்னும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. 


பல பெண்களின் கண்ணீர், அனுபவங்கள் மற்றும் சமூக ஆரோக்கியத்தின் பாதிப்பு, டபாவின் அடிமைத்துவம் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் இதன் விளைவுகளை  வெளிப்படுத்துகின்றது.



காம்பியாவில் பெண்களை அடிமைப்படுத்தும் “டபா” புகையிலைப் பழக்கம் ‘டபா’ என்பது மேற்கு ஆப்பிரிக்காவில் ஆண்கள், பெண்கள் பல தசாப்தங்களாக பயன்படுத்தி வரும் புகையிலைப் பொடியாகும்.இதை மூக்கின் வழியாக உறிஞ்சுதல், வாயில் வைத்து மெல்லுதல் அல்லது யோனிப் பாதையில் தடவி பயன்படுத்துதல் போன்ற பல முறைகளில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அனுபவிக்கின்றனர்.பல பெண்கள் புகையிலைப் பொடியால் செய்யப்பட்ட பசையை தங்கள் யோனிப் பாதையில் வைத்துக்கொள்கின்றனர்.ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதிலும், இதை ரகசியமாக வாங்கி பெண்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். காம்பியா நாடு முழுவதும் உள்ள விநியோகஸ்தர்களின் வலைப்பின்னல் மூலம் 'டபா' ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது.குறித்த டபா புகையிலைப் பொடி  பராமரிப்பு மற்றும் விற்பனை பெரும்பாலும் பெண்கள் வழியாக நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளில் 'டபா'-வின் வடிவம் மாறிவிட்டது. இப்போது இந்தப் புகையிலைப் பொடியில் பல்வேறு இதரப் பொருட்களைக் கலந்து பசையாகத் தயாரிக்கின்றனர்ஒரு பாக்கெட்டின் விலை குறைவாகவிருந்தாலும் அதில் அதிக லாபம் உள்ளது.டபாவை முதன்முறை யோனிப் பாதையில் பயன்படுத்துவது என்பது ஒரு பயங்கரமான அனுபவம் என்று இதனைப் பயன்படுத்தும் பெண்கள் கூறுகின்றனர்டபாவில் உள்ள நிக்கோட்டின் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் ரசாயனங்கள் பெண்களின் உடல் மற்றும் கர்ப்பத்திற்கு தீங்கு விளைவிக்கும்.இதனைச் சரியான முறையில் கட்டுப்படுத்தும் சட்டங்கள் காம்பியாவில் இல்லாததால், டபா பரவலாக பயன்பாட்டில் உள்ளது என ஆய்வுகள் காட்டுகின்றன.காம்பியா அரசு 2020-லேயே டபாவை ஆபத்தானது என்று அறிவித்தது. ஆனால் சட்டங்கள் சரியாக அமல்படுத்தப்படாததால் டபா இன்னும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. பல பெண்களின் கண்ணீர், அனுபவங்கள் மற்றும் சமூக ஆரோக்கியத்தின் பாதிப்பு, டபாவின் அடிமைத்துவம் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் இதன் விளைவுகளை  வெளிப்படுத்துகின்றது.

Advertisement

Advertisement

Advertisement