இலங்கைக்கான கியூபா தூதர் பத்ரிசியா லசாரா பெகோ குவேரா இன்று புத்தளத்தின் சிராம்பையடி பகுதியில் வசிக்கும் ஆப்பிரிக்க சமூகத்தினரை சந்தித்துள்ளார்.
அவர் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்.
சந்திப்பின் போது, சிராம்பையடி பகுதியில் வசிக்கும் ஆப்பிரிக்க சமூகத்தினர் தங்களது பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகள் அணிந்து, பாடல்கள், நடனங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி தூதரை வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் புத்தளம் மாநகர சபை தலைவர் ரின்ஷாத் அஹமட் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டு நிகழ்வுகளை பார்வையிட்டனர்.
புத்தளத்திலுள்ள ஆப்பிரிக்க சமூகத்தை சந்தித்த இலங்கைக்கான கியூபா தூதர் இலங்கைக்கான கியூபா தூதர் பத்ரிசியா லசாரா பெகோ குவேரா இன்று புத்தளத்தின் சிராம்பையடி பகுதியில் வசிக்கும் ஆப்பிரிக்க சமூகத்தினரை சந்தித்துள்ளார்.அவர் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்.சந்திப்பின் போது, சிராம்பையடி பகுதியில் வசிக்கும் ஆப்பிரிக்க சமூகத்தினர் தங்களது பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகள் அணிந்து, பாடல்கள், நடனங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி தூதரை வரவேற்றனர்.இந்த நிகழ்வில் புத்தளம் மாநகர சபை தலைவர் ரின்ஷாத் அஹமட் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டு நிகழ்வுகளை பார்வையிட்டனர்.