பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் சலிந்து மல்ஷித குணரத்ன அல்லது ‘பாணந்துறை குடு சலிந்து’ என்பவரின் பணப் பொறுப்பாளராகச் செயற்பட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர் அவரது மனைவியுடன் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை தலைமையக பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இரத்மலானை விமான நிலைய சந்திக்கு அருகில் வைத்து குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 63 இலட்சம் ரூபாய் பணம், 15,055 மில்லிகிராம் ஹெரோயின், நவீன ரக பணம் எண்ணும் இயந்திரம், மின்னணு தராசு மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
முச்சக்கரவண்டி ஒன்றில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பயணிப்பதாக கல்கிசை தலைமையக தலைமை பொலிஸ் பரிசோதகர் சுமேத விமல குணரத்னவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது விமான நிலைய சந்தியிலிருந்து காலி வீதியை நோக்கி வந்த முச்சக்கரவண்டியை பொலிஸார் மறித்து சோதனையிட்டுள்ளனர். முச்சக்கரவண்டியின் பின்புற இருக்கையில் பெண் ஒருவரும் இருந்துள்ளார்.
முச்சக்கரவண்டி ஓட்டுநரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை பரிசோதித்ததில், அவர் பாணந்துறை – அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
அவரது சந்தேகத்திற்கிடமான நடத்தையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த பெண் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதற்குள் பெருந்தொகையான பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர்கள் கணவன்–மனைவி என்பதும், ‘பாணந்துறை குடு சலிந்து’ என்பவருக்குச் சொந்தமான போதைப்பொருளை விநியோகித்து, அதற்கான பணத்தை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்தப் பணிக்காக சலிந்து மாதாந்தம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கி வந்ததாக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, குறித்த தம்பதியினர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிலியந்தலை – ஹெடகம பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வீட்டை சோதனையிட்டபோது, பணத்தை எண்ணுவதற்குப் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரம் மற்றும் மின்னணு தராசு உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள 26 மற்றும் 34 வயதுடைய தம்பதியினரை தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய தம்பதி - விசாரணையில் அம்பலமாக அதிர்ச்சி பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் சலிந்து மல்ஷித குணரத்ன அல்லது ‘பாணந்துறை குடு சலிந்து’ என்பவரின் பணப் பொறுப்பாளராகச் செயற்பட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர் அவரது மனைவியுடன் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.கல்கிசை தலைமையக பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இரத்மலானை விமான நிலைய சந்திக்கு அருகில் வைத்து குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களிடமிருந்து 63 இலட்சம் ரூபாய் பணம், 15,055 மில்லிகிராம் ஹெரோயின், நவீன ரக பணம் எண்ணும் இயந்திரம், மின்னணு தராசு மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.முச்சக்கரவண்டி ஒன்றில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பயணிப்பதாக கல்கிசை தலைமையக தலைமை பொலிஸ் பரிசோதகர் சுமேத விமல குணரத்னவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது விமான நிலைய சந்தியிலிருந்து காலி வீதியை நோக்கி வந்த முச்சக்கரவண்டியை பொலிஸார் மறித்து சோதனையிட்டுள்ளனர். முச்சக்கரவண்டியின் பின்புற இருக்கையில் பெண் ஒருவரும் இருந்துள்ளார்.முச்சக்கரவண்டி ஓட்டுநரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை பரிசோதித்ததில், அவர் பாணந்துறை – அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.அவரது சந்தேகத்திற்கிடமான நடத்தையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து, பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த பெண் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதற்குள் பெருந்தொகையான பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர்கள் கணவன்–மனைவி என்பதும், ‘பாணந்துறை குடு சலிந்து’ என்பவருக்குச் சொந்தமான போதைப்பொருளை விநியோகித்து, அதற்கான பணத்தை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.இந்தப் பணிக்காக சலிந்து மாதாந்தம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கி வந்ததாக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இதேவேளை, குறித்த தம்பதியினர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிலியந்தலை – ஹெடகம பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அந்த வீட்டை சோதனையிட்டபோது, பணத்தை எண்ணுவதற்குப் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரம் மற்றும் மின்னணு தராசு உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டுள்ள 26 மற்றும் 34 வயதுடைய தம்பதியினரை தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.