• Oct 15 2026

மத்திய மலைநாட்டில் தொடரும் மழை – நிரம்பி வரும் நீர்த்தேக்கங்கள்; வான் கதவுகள் திறப்பு

Chithra / Oct 14th 2026, 10:09 am
image


 மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன், சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.


இன்று (14) காலை 8 மணி நிலவரப்படி, மவுசாக்கலை நீர்த்தேக்கம் அதன் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் 8 அடி நீர் நிரம்ப வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை, காசல்ரீ நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் 3 அடி 2 அங்குலம் நீர் நிரம்ப வேண்டியுள்ளதுடன், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை விட 6.79 மீற்றர் குறைவாகக் காணப்படுகின்றது.


மேலும், மேல் கொத்மலை நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு 2.59 மீற்றர் நீர் நிரம்ப வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நீர்மின் உற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இதன் காரணமாக கென்யோன், விமலசுரேந்திர, லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல மற்றும் புரோட்லேன் ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.


மத்திய மலைநாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

மத்திய மலைநாட்டில் தொடரும் மழை – நிரம்பி வரும் நீர்த்தேக்கங்கள்; வான் கதவுகள் திறப்பு  மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன், சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.இன்று (14) காலை 8 மணி நிலவரப்படி, மவுசாக்கலை நீர்த்தேக்கம் அதன் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் 8 அடி நீர் நிரம்ப வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, காசல்ரீ நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் 3 அடி 2 அங்குலம் நீர் நிரம்ப வேண்டியுள்ளதுடன், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை விட 6.79 மீற்றர் குறைவாகக் காணப்படுகின்றது.மேலும், மேல் கொத்மலை நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு 2.59 மீற்றர் நீர் நிரம்ப வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நீர்மின் உற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன் காரணமாக கென்யோன், விமலசுரேந்திர, லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல மற்றும் புரோட்லேன் ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.மத்திய மலைநாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement