வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 235 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (25) ஒரு நிமிட இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் பதிவான இரட்டை நிலநடுக்கங்கள் நாட்டை உலுக்கியுள்ளன. இதில் இரண்டாவதாக ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 1900 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெனிசுலாவைத் தாக்கிய மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கமாகப் பதிவாகியுள்ளது.
தலைநகர் கராகஸ் மற்றும் லா குவைரா மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதுடன், மேலும் 250-க்கும் அதிகமான கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் படையினர் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அச்சம் நிலவுவதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் அதிர்வுகளால் கட்டிடங்கள் சீட்டுக் கட்டுகள் போல் சரிந்து விழுந்தன. மின் கம்பங்கள் அறுந்து விழுந்ததால் பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், லா குவைரா கடற்பகுதியில் பல அடி உயரம் கொண்ட சுனாமி அலைகள் கரையை தாக்கியதால் படகுகள் கடலில் தத்தளித்தன. அச்சமடைந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி அவசரமாக வெளியேறினர்.
நிலநடுக்கத்தின் அதிர்வு அண்டை நாடான பிரேசில் வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பேரழிவைத் தொடர்ந்து வெனிசுலாவின் சர்வதேச விமான நிலையமும் உடனடியாக மூடப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; 235 பேரை பலியெடுத்த துயரம் 30,000 பேர் மாயம் வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 235 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நேற்று (25) ஒரு நிமிட இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் பதிவான இரட்டை நிலநடுக்கங்கள் நாட்டை உலுக்கியுள்ளன. இதில் இரண்டாவதாக ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 1900 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெனிசுலாவைத் தாக்கிய மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கமாகப் பதிவாகியுள்ளது.தலைநகர் கராகஸ் மற்றும் லா குவைரா மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதுடன், மேலும் 250-க்கும் அதிகமான கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் படையினர் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அச்சம் நிலவுவதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் அதிர்வுகளால் கட்டிடங்கள் சீட்டுக் கட்டுகள் போல் சரிந்து விழுந்தன. மின் கம்பங்கள் அறுந்து விழுந்ததால் பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், லா குவைரா கடற்பகுதியில் பல அடி உயரம் கொண்ட சுனாமி அலைகள் கரையை தாக்கியதால் படகுகள் கடலில் தத்தளித்தன. அச்சமடைந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி அவசரமாக வெளியேறினர்.நிலநடுக்கத்தின் அதிர்வு அண்டை நாடான பிரேசில் வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பேரழிவைத் தொடர்ந்து வெனிசுலாவின் சர்வதேச விமான நிலையமும் உடனடியாக மூடப்பட்டுள்ளது.