• Apr 26 2026

இளம் தொழில்முனைவோருக்கான சலுகைக் கடன் திட்டம் - 750 மில்லியன் ஒதுக்கீடு

Chithra / Mar 24th 2026, 8:09 pm
image

நாட்டின் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் புதிய இளம் தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சலுகைக் கடன் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2025 ஆம் ஆண்டு பாதீட்டில் இந்த திட்டத்திற்காக ஆரம்பத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

தற்போது இத்திட்டத்தைத் தடையின்றித் தொடர்வதற்காக, 2026 ஆம் ஆண்டு பாதீட்டின் ஊடாக மேலதிகமாக 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதியுள்ள இளம் தொழில்முனைவோருக்கு ஆண்டுக்கு 4 சதவீத மிகக்குறைந்த வட்டி வீதத்தில் இந்த கடன்கள் வழங்கப்படவுள்ளன.

மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய அரச வங்கிகளின் ஊடாக இந்த கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான நடைமுறைப்படுத்தல் வழிகாட்டல்களுக்கு அமைச்சரவை தனது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நிதி வசதிகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கி 50,000 புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.


இளம் தொழில்முனைவோருக்கான சலுகைக் கடன் திட்டம் - 750 மில்லியன் ஒதுக்கீடு நாட்டின் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் புதிய இளம் தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சலுகைக் கடன் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.2025 ஆம் ஆண்டு பாதீட்டில் இந்த திட்டத்திற்காக ஆரம்பத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.தற்போது இத்திட்டத்தைத் தடையின்றித் தொடர்வதற்காக, 2026 ஆம் ஆண்டு பாதீட்டின் ஊடாக மேலதிகமாக 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தகுதியுள்ள இளம் தொழில்முனைவோருக்கு ஆண்டுக்கு 4 சதவீத மிகக்குறைந்த வட்டி வீதத்தில் இந்த கடன்கள் வழங்கப்படவுள்ளன.மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய அரச வங்கிகளின் ஊடாக இந்த கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான நடைமுறைப்படுத்தல் வழிகாட்டல்களுக்கு அமைச்சரவை தனது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளது.அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நிதி வசதிகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கி 50,000 புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

Advertisement

Advertisement

Advertisement