நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று (26) ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீ காரணமாக இதுவரை 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதியில் நிலவும் அதிக உஷ்ணமான காலநிலை காரணமாக தீ வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் வனத்துறையினர், அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள், கிராம மக்கள் ஆகியோர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தீயை கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பொதுமக்களின் உதவியை வனத்துறையினர் கோரியுள்ளனர்.
பல தரப்பினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், தீ பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வலப்பனையில் பாரிய காட்டுத் தீ – 10 ஏக்கருக்கும் அதிகமான பகுதி தீக்கிரை நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இன்று (26) ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீ காரணமாக இதுவரை 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அப்பகுதியில் நிலவும் அதிக உஷ்ணமான காலநிலை காரணமாக தீ வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் வனத்துறையினர், அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள், கிராம மக்கள் ஆகியோர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், தீயை கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பொதுமக்களின் உதவியை வனத்துறையினர் கோரியுள்ளனர்.பல தரப்பினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், தீ பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.