2025 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தண்டனைச் சட்டத் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்தோடு, வீடுகள், பாடசாலைகள், தடுப்பு மையங்கள் மற்றும் வீதிகள் போன்ற இடங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் கிடைக்கபெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகம் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதன்படி, கடந்த ஆண்டு 1,350 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 1,126 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
சிறுவர் பாதுகாப்பு ஆபத்தில் - குவியும் முறைப்பாடுகள் அமைச்சர் சுட்டிக்காட்டு 2025 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தண்டனைச் சட்டத் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்தோடு, வீடுகள், பாடசாலைகள், தடுப்பு மையங்கள் மற்றும் வீதிகள் போன்ற இடங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் கிடைக்கபெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகம் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். அதன்படி, கடந்த ஆண்டு 1,350 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 1,126 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.