• May 13 2026

தமிழக மீனவர்களை விடுவிக்க எடுக்குமாறு முதலமைச்சர் விஜய் கடிதம்!

shanu / May 12th 2026, 5:49 pm
image

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் அனுப்பியுள்ளார். 


இது தொடர்பில் தமிழக முதலமைச்சரது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் கடிதத்தை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். 


அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த ஆறு மீனவர்கள் இன்று (12.05.2026) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிகழ்வின் மீது தங்களது கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.


இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த  அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் 10.05.2026 அன்று நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அவர்களை சர்வதேச எல்லையை கடந்ததாக தெரிவித்து இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.


இலங்கை கடற்படையால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.


எனவே இப்பிரச்சனை குறித்து இலங்கை அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக மீட்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 


தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்கும், பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கும் கிடைக்கப்பெறும் அனைத்து ராஜதந்திர வழிகளையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  சி.ஜோசப் விஜய், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.   


இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களை இலங்கை கடற்படை இன்று (12.05.2026) கைது செய்துள்ளதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன் - என்றுள்ளது. 


தமிழக மீனவர்களை விடுவிக்க எடுக்குமாறு முதலமைச்சர் விஜய் கடிதம் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பில் தமிழக முதலமைச்சரது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் கடிதத்தை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த ஆறு மீனவர்கள் இன்று (12.05.2026) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிகழ்வின் மீது தங்களது கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த  அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் 10.05.2026 அன்று நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அவர்களை சர்வதேச எல்லையை கடந்ததாக தெரிவித்து இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.இலங்கை கடற்படையால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.எனவே இப்பிரச்சனை குறித்து இலங்கை அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக மீட்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்கும், பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கும் கிடைக்கப்பெறும் அனைத்து ராஜதந்திர வழிகளையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  சி.ஜோசப் விஜய், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.   இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களை இலங்கை கடற்படை இன்று (12.05.2026) கைது செய்துள்ளதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன் - என்றுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement