யாழ். புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய நூற்றாண்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 05 இல் சிறப்பாக நடைபெறவுள்ளது.
தீவகத்தின் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான யாழ் / புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் தன்னுடைய நூற்றாண்டு நிறைவை பாடசாலை மைதானத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடவுள்ளது.
"ஒரு நூற்றாண்டு கல்விப்பயணம்... தொடரும் எங்கள் சேவையின் கனவு..." எனும் பொன்மொழியுடன் பாடசாலை அதிபர் வ. அருட்செல்வன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது .
குறித்த நிகழ்வின் காலை அமர்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஞானசுந்தரனும் சிறப்பு விருந்தினராக வேலணை பிரதேச செயலர் த. அகிலனும் கௌரவ விருந்தினராகவங்கி முகாமையாளர் மற்றும் நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் பழைய மாணவியுமான க. செந்திலும் ,மாலை அமர்வில் சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் த. லெனின் அறிவழகன்
,கௌரவ விருந்தினர்களாக ஓய்வுநிலை அதிபர் ம. தனபாலசிங்கம், செல்வி. ஓய்வுநிலை அதிபர் ம. சுப்பிரமணியம்,ஓய்வுநிலை அதிபர் நா. பஞ்சலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பாடசாலையின் வளர்ச்சிக்கு வித்திட்ட பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு பாடசாலைச் சமூகமும் பழைய மாணவர் சங்கமும் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளன.
புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா யாழ். புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய நூற்றாண்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 05 இல் சிறப்பாக நடைபெறவுள்ளது.தீவகத்தின் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான யாழ் / புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் தன்னுடைய நூற்றாண்டு நிறைவை பாடசாலை மைதானத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடவுள்ளது."ஒரு நூற்றாண்டு கல்விப்பயணம். தொடரும் எங்கள் சேவையின் கனவு." எனும் பொன்மொழியுடன் பாடசாலை அதிபர் வ. அருட்செல்வன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது .குறித்த நிகழ்வின் காலை அமர்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஞானசுந்தரனும் சிறப்பு விருந்தினராக வேலணை பிரதேச செயலர் த. அகிலனும் கௌரவ விருந்தினராகவங்கி முகாமையாளர் மற்றும் நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் பழைய மாணவியுமான க. செந்திலும் ,மாலை அமர்வில் சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் த. லெனின் அறிவழகன்,கௌரவ விருந்தினர்களாக ஓய்வுநிலை அதிபர் ம. தனபாலசிங்கம், செல்வி. ஓய்வுநிலை அதிபர் ம. சுப்பிரமணியம்,ஓய்வுநிலை அதிபர் நா. பஞ்சலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.பாடசாலையின் வளர்ச்சிக்கு வித்திட்ட பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு பாடசாலைச் சமூகமும் பழைய மாணவர் சங்கமும் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளன.