• Apr 18 2026

தென்னை மரத்தில் மோதி குத்துக்கரணம் அடித்த கார்; தப்பிய உயிர்கள்! புதுவருடத்தில் துயரம்

Chithra / Jan 1st 2026, 11:57 am
image

 

அம்பலாங்கொடை - கொடகம பகுதியில்  கார் ஒன்று சாலையை விட்டு விலகி சாலையோரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 


இவ் விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.


இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 


கார் வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதி பின்னர் மரத்தின் அடிப்பகுதியில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


அம்பலாங்கொடையிலிருந்து ஹிக்கடுவை நோக்கிச் சென்ற காரே விபத்தில் சிக்கியுள்ளது. 


விபத்து நடந்தபோது வீதியின் குறுக்கே திடீரென பாய்ந்த  பயணியை காரின் சாரதி காப்பாற்ற முயன்ற போதே இச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. 


மேலதி விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

தென்னை மரத்தில் மோதி குத்துக்கரணம் அடித்த கார்; தப்பிய உயிர்கள் புதுவருடத்தில் துயரம்  அம்பலாங்கொடை - கொடகம பகுதியில்  கார் ஒன்று சாலையை விட்டு விலகி சாலையோரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கார் வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதி பின்னர் மரத்தின் அடிப்பகுதியில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.அம்பலாங்கொடையிலிருந்து ஹிக்கடுவை நோக்கிச் சென்ற காரே விபத்தில் சிக்கியுள்ளது. விபத்து நடந்தபோது வீதியின் குறுக்கே திடீரென பாய்ந்த  பயணியை காரின் சாரதி காப்பாற்ற முயன்ற போதே இச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. மேலதி விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement