• May 19 2026

வெற்று எரிவாயு சிலிண்டர் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி!

Ziya / Dec 23rd 2025, 5:08 pm
image

லிட்ரோ எரிவாயு கம்பனியினால் 2025 முதல் 2027 வரையிலான காலப்பகுதிக்காக வெற்று LPG சிலிண்டர் வகைகள் நான்கு (04) கொள்வனவு செய்வதற்காக, இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்களிடமிருந்து சர்வதேச போட்டி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது.

இதற்காக மொத்தம் நான்கு (04) விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிலையியற் பெறுகைக் குழு முன்வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில், குறைந்தபட்ச விலையுடன் கணிசமான பதிலளிப்புக்களை வழங்கிய M/s Sahamitr Metal Pressure Containers Public Co. Ltd நிறுவனத்திற்கு  வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,2.3 கிலோகிராம் சிலிண்டர் – 120,000 உம்,5.0 கிலோகிராம் சிலிண்டர் – 185,000 உம்,12.5 கிலோகிராம் சிலிண்டர் – 450,000 உம்,37.5 கிலோகிராம் சிலிண்டர் – 7,000 உம்என்ற அளவில் LPG சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

இது தொடர்பில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


வெற்று எரிவாயு சிலிண்டர் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி லிட்ரோ எரிவாயு கம்பனியினால் 2025 முதல் 2027 வரையிலான காலப்பகுதிக்காக வெற்று LPG சிலிண்டர் வகைகள் நான்கு (04) கொள்வனவு செய்வதற்காக, இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்களிடமிருந்து சர்வதேச போட்டி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது.இதற்காக மொத்தம் நான்கு (04) விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிலையியற் பெறுகைக் குழு முன்வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில், குறைந்தபட்ச விலையுடன் கணிசமான பதிலளிப்புக்களை வழங்கிய M/s Sahamitr Metal Pressure Containers Public Co. Ltd நிறுவனத்திற்கு  வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி,2.3 கிலோகிராம் சிலிண்டர் – 120,000 உம்,5.0 கிலோகிராம் சிலிண்டர் – 185,000 உம்,12.5 கிலோகிராம் சிலிண்டர் – 450,000 உம்,37.5 கிலோகிராம் சிலிண்டர் – 7,000 உம்என்ற அளவில் LPG சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளன.இது தொடர்பில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement