இலங்கை மற்றும் லக்சம்பேர்க் இற்கும் இடையிலான இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை மற்றும் லக்சம்பேர்க் இற்கும் இடையிலான இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பதற்கான ஒப்பந்தம்2013.01.31 அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இரு நாடுகளும் Inclusive Framework of the Base Erosion and Profit Shifting (BEPS) வேலைத்திட்டத்தின் உறுப்பு நாடுகளாகும்.
குறித்த வேலைத்திட்டத்தின் உறுப்பு நாடுகள் G-20 OECD BEPS Action Reports இன் குறைந்தபட்சதரநியமங்களையாவது அமுல்படுத்த வேண்டும்.
அதற்கமைய, குறித்த தேவைகளுடன் இணங்கியொழுகுவதற்காக இரு நாடுகளும் கையொப்பமிட்டுள்ள மேற்குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் ஒரு சில திருத்தங்கள் லக்சம்பேர்க் வரி அதிகாரிகள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திருத்தங்களை ஆராய்ந்து எமது நாட்டு வரி அதிகாரிகள் உடன்பாட்டை தெரிவித்துள்ளதுடன், அதற்கிணங்க திருத்தப்பட்ட ஒப்பந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும்,வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின்அவதானிப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.
அதற்கமைய, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் லக்சம்பேர்க் நாட்டுக்கும் இடையிலான இரட்டை வரிவிதிப்பு வழிவகைகளை தவிர்த்தல் மற்றும் அரசின் நிதித் தடுத்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தப்பட்ட ஒப்பந்தத்த உடன்படிக்கையில் இருதரப்பும் கையொப்பமிடுவதற்கும், பின்னர் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டர சிறைச்சட்டத்தின் பிரகாரம் குறித்த ஒப்பந்தத்தை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல்மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை மற்றும் லக்சம்பேர்க் இற்கும் இடையிலான இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி இலங்கை மற்றும் லக்சம்பேர்க் இற்கும் இடையிலான இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மற்றும் லக்சம்பேர்க் இற்கும் இடையிலான இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பதற்கான ஒப்பந்தம்2013.01.31 அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இரு நாடுகளும் Inclusive Framework of the Base Erosion and Profit Shifting (BEPS) வேலைத்திட்டத்தின் உறுப்பு நாடுகளாகும். குறித்த வேலைத்திட்டத்தின் உறுப்பு நாடுகள் G-20 OECD BEPS Action Reports இன் குறைந்தபட்சதரநியமங்களையாவது அமுல்படுத்த வேண்டும். அதற்கமைய, குறித்த தேவைகளுடன் இணங்கியொழுகுவதற்காக இரு நாடுகளும் கையொப்பமிட்டுள்ள மேற்குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் ஒரு சில திருத்தங்கள் லக்சம்பேர்க் வரி அதிகாரிகள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த திருத்தங்களை ஆராய்ந்து எமது நாட்டு வரி அதிகாரிகள் உடன்பாட்டை தெரிவித்துள்ளதுடன், அதற்கிணங்க திருத்தப்பட்ட ஒப்பந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும்,வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின்அவதானிப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கமைய, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் லக்சம்பேர்க் நாட்டுக்கும் இடையிலான இரட்டை வரிவிதிப்பு வழிவகைகளை தவிர்த்தல் மற்றும் அரசின் நிதித் தடுத்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தப்பட்ட ஒப்பந்தத்த உடன்படிக்கையில் இருதரப்பும் கையொப்பமிடுவதற்கும், பின்னர் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டர சிறைச்சட்டத்தின் பிரகாரம் குறித்த ஒப்பந்தத்தை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல்மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.