• Apr 21 2026

இலங்கையிலுள்ள வங்கிகள் வழமை போல் இயங்கும்! முக்கிய அறிவிப்பு!

Chithra / Mar 20th 2026, 1:10 pm
image

 

இலங்கையிலுள்ள வங்கிகள் திங்கள் முதல் வெள்ளி வரை அத்தியாவசிய சேவையாகத் தொடர்ந்து இயங்கும் என இலங்கை வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது.


நாட்டில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு, வங்கிச் சேவைகளில் சில தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


தற்காலிக எரிபொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ், புதன்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாத்திரமே வங்கிக் கிளைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாட்களில் வழமையான நேர அட்டவணையின்படி சேவைகள் முன்னெடுக்கப்படும்.


வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துமாறும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வங்கி கிளைகளுக்குச் செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையிலுள்ள வங்கிகள் வழமை போல் இயங்கும் முக்கிய அறிவிப்பு  இலங்கையிலுள்ள வங்கிகள் திங்கள் முதல் வெள்ளி வரை அத்தியாவசிய சேவையாகத் தொடர்ந்து இயங்கும் என இலங்கை வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது.நாட்டில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு, வங்கிச் சேவைகளில் சில தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.தற்காலிக எரிபொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ், புதன்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாத்திரமே வங்கிக் கிளைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாட்களில் வழமையான நேர அட்டவணையின்படி சேவைகள் முன்னெடுக்கப்படும்.வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துமாறும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வங்கி கிளைகளுக்குச் செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement