• Apr 15 2026

புவியில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டிமிஸ் II!

shanu / Apr 3rd 2026, 9:51 am
image

புவியின் சுற்றுப்பாதையில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டெமிஸ் II தற்போது நிலவின் மேற்பரப்பை நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது. 


ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்வெளி வீரர்கள், நிலவைச் சுற்றி வருவதற்கான தங்களின் 10 நாள் பயணத்தின் இரண்டாம் நாளில் கால்பதித்துள்ளனர். 


இது மனிதகுலம் இதுவரை விண்வெளியில் சென்றிராத மிக நீண்ட தூரப் பயணமாக கருதப்படுகின்றது. 


நேற்று (2) ஏவப்பட்டதில் இருந்து 23 மணிநேரத்திற்கும் மேலாக, விண்கலம் பூமியைச் சுற்றி வந்துள்ளது. 


இன்றைய தினம் 'ட்ரான்ஸ்-லூனார் இன்ஜெக்ஷன்' (trans-lunar injection burn) எனப்படும் முக்கியமான கட்டத்திற்கான இறுதி முடிவை விண்வெளி வீரர்கள் எதிர்நோக்கியிருந்தனர். 


இது பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து விண்கலத்தை வெளியேற்றி, நிலவை நோக்கிய பாதையில் செலுத்த உதவும் செயன்முறையாகும். 


இந்த நிகழ்வு அதிகாலை 5.19 மணியளவில் இடம்பெற்ற நிலையில் நாசாவின் அனுமதியுடன் புவி சுற்றுப்பாதையில் இருந்து குறித்த விண்கலம் வெற்றிகரமாக வௌியேறியது. 


விண்வெளி வீரர்கள் எதிர்வரும் ஏப்ரல் 6 திங்கட்கிழமை அன்று நிலவின் மறுபக்கத்தை சென்றடைவார்கள். 


50 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மனிதர்கள் மீண்டும் நிலவை நோக்கிப் பயணிக்கின்றனர். 


அவர்கள் நிலவில் தரை இறங்கப் போவதில்லை என்றாலும், இதற்கு முன்பு மனிதர்கள் பார்த்திராத ஒரு காட்சியை அங்கிருந்து காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


நிலவின் மேற்பரப்பை சுற்றிவருவதற்காக ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலம் நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புவியில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டிமிஸ் II புவியின் சுற்றுப்பாதையில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டெமிஸ் II தற்போது நிலவின் மேற்பரப்பை நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்வெளி வீரர்கள், நிலவைச் சுற்றி வருவதற்கான தங்களின் 10 நாள் பயணத்தின் இரண்டாம் நாளில் கால்பதித்துள்ளனர். இது மனிதகுலம் இதுவரை விண்வெளியில் சென்றிராத மிக நீண்ட தூரப் பயணமாக கருதப்படுகின்றது. நேற்று (2) ஏவப்பட்டதில் இருந்து 23 மணிநேரத்திற்கும் மேலாக, விண்கலம் பூமியைச் சுற்றி வந்துள்ளது. இன்றைய தினம் 'ட்ரான்ஸ்-லூனார் இன்ஜெக்ஷன்' (trans-lunar injection burn) எனப்படும் முக்கியமான கட்டத்திற்கான இறுதி முடிவை விண்வெளி வீரர்கள் எதிர்நோக்கியிருந்தனர். இது பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து விண்கலத்தை வெளியேற்றி, நிலவை நோக்கிய பாதையில் செலுத்த உதவும் செயன்முறையாகும். இந்த நிகழ்வு அதிகாலை 5.19 மணியளவில் இடம்பெற்ற நிலையில் நாசாவின் அனுமதியுடன் புவி சுற்றுப்பாதையில் இருந்து குறித்த விண்கலம் வெற்றிகரமாக வௌியேறியது. விண்வெளி வீரர்கள் எதிர்வரும் ஏப்ரல் 6 திங்கட்கிழமை அன்று நிலவின் மறுபக்கத்தை சென்றடைவார்கள். 50 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மனிதர்கள் மீண்டும் நிலவை நோக்கிப் பயணிக்கின்றனர். அவர்கள் நிலவில் தரை இறங்கப் போவதில்லை என்றாலும், இதற்கு முன்பு மனிதர்கள் பார்த்திராத ஒரு காட்சியை அங்கிருந்து காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் மேற்பரப்பை சுற்றிவருவதற்காக ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலம் நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement