இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் நாளை (30) வழமை போன்று உரிய நேர அட்டவணைப்படி சேவையில் ஈடுபடுத்தப்படும் என அச்சபை தெரிவித்துள்ளது.
உரிய நேர அட்டவணைக்கமைய பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அச்சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்தார்.
நாளைய தினம் சேவைகளை வழங்குவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் கடமைக்குச் சமுகமளிக்கவுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, பயணிகளுக்கு எவ்வித சௌகரியங்கள் இன்றி பயண வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை இலங்கை போக்குவரத்து சபை வழங்கும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாளைய தினம் பல அரச பணியாளர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், அதற்கமையப் பல அரச நிறுவனங்களின் சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என உரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சங்கப் போராட்டத்தால் பேருந்து சேவைகள் பாதிக்கப்படுமா வெளியான முக்கிய தகவல் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் நாளை (30) வழமை போன்று உரிய நேர அட்டவணைப்படி சேவையில் ஈடுபடுத்தப்படும் என அச்சபை தெரிவித்துள்ளது. உரிய நேர அட்டவணைக்கமைய பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அச்சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்தார்.நாளைய தினம் சேவைகளை வழங்குவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் கடமைக்குச் சமுகமளிக்கவுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.இதற்கமைய, பயணிகளுக்கு எவ்வித சௌகரியங்கள் இன்றி பயண வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை இலங்கை போக்குவரத்து சபை வழங்கும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்துள்ளனர்.நாளைய தினம் பல அரச பணியாளர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், அதற்கமையப் பல அரச நிறுவனங்களின் சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என உரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.