• Nov 29 2026

வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு! கால அவகாசத்தில் மாற்றம்

Chithra / Nov 29th 2026, 3:42 pm
image


2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி விபரத் திரட்டுகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதன்படி, வரி விபரத் திரட்டுகளைத் தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதி நவம்பர் 30ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, வருமான வரிக்காகப் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நபர்களும் நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது வரி விபரத் திரட்டுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.


எனினும், இம்முறை முதன்முறையாக வரி விபரத் திரட்டுகளைச் சமர்ப்பிப்போரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமான நிர்வாக முகாமைத்துவத் தகவல் கட்டமைப்பில் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் ஏற்பட்ட தொழில்நுட்பத் தாமதங்கள் காரணமாக, வரி செலுத்துவோர் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் உரிய காலத்திற்குள் விபரத் திரட்டுகளைச் சமர்ப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


இதனைக் கருத்திற்கொண்டே கால அவகாசத்தை நீடிக்கத் தீர்மானித்துள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு கால அவகாசத்தில் மாற்றம் 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி விபரத் திரட்டுகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, வரி விபரத் திரட்டுகளைத் தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதி நவம்பர் 30ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, வருமான வரிக்காகப் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நபர்களும் நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது வரி விபரத் திரட்டுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும், இம்முறை முதன்முறையாக வரி விபரத் திரட்டுகளைச் சமர்ப்பிப்போரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமான நிர்வாக முகாமைத்துவத் தகவல் கட்டமைப்பில் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஏற்பட்ட தொழில்நுட்பத் தாமதங்கள் காரணமாக, வரி செலுத்துவோர் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் உரிய காலத்திற்குள் விபரத் திரட்டுகளைச் சமர்ப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.இதனைக் கருத்திற்கொண்டே கால அவகாசத்தை நீடிக்கத் தீர்மானித்துள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement