• Aug 26 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி பொருளாதாரப் போர்

Ziya / Aug 25th 2026, 3:36 pm
image

ஈரானுக்கு எதிரான பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 


அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி “Operation Economic Outcast” என்ற புதிய நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.


பெசென்டின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஈரான் அரசைத் தாங்கி நிற்கும் பொருளாதார மற்றும் நிதி வழித்தடங்களை துண்டிப்பது, அந்நாட்டை சர்வதேச பொருளாதார அமைப்பில் இருந்து தனிமைப்படுத்துவது என்பதாகும்.


புதிய நடவடிக்கையின் கீழ் குறிப்பாக 5 முக்கிய துறைகள் குறிவைக்கப்பட்டுள்ளன


டிஜிட்டல் சொத்துகள் தொழில்நுட்பம்

தங்கம்

விமானப் போக்குவரத்து

கப்பல் மற்றும் கடல்சார் துறை


மேலும், ஈரானின் எண்ணெய் வருவாய், பணப் பரிமாற்றங்கள் மற்றும் தடைகளைத் தவிர்க்க உதவும் நிறுவனங்கள் மீதும் அழுத்தம் அதிகரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே சுமார் 60 நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கப்பல்கள் மீது புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


இந்த நடவடிக்கையின் முக்கியமான அம்சம் ஈரானை மட்டும் குறிவைப்பதல்ல.


ஈரானுடன் தொடர்ந்து பொருளாதார உறவுகளை வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கும் அமெரிக்க தடைகள் விரிவுபடுத்தப்படலாம் என்று பெசென்ட் எச்சரித்துள்ளார். குறிப்பாக ஈரானின் எண்ணெய் கொள்முதல், கப்பல் போக்குவரத்து, நிதி பரிமாற்றம் மற்றும் தடைகளைத் தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது அழுத்தம் அதிகரிக்கலாம்.


இதில் ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றான சீனாவும் முக்கிய கவனத்தில் உள்ளது. ஆனால் எந்த நாடுகள் மீது உடனடியாக இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்பது முழுமையாக அறிவிக்கப்படவில்லை.


இதன் தாக்கம் ஈரானைத் தாண்டி, சர்வதேச எண்ணெய் சந்தை, கப்பல் போக்குவரத்து மற்றும் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கக்கூடும். புதிய அறிவிப்புக்குப் பிறகு எண்ணெய் விலைகள் சரிந்ததாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


“Operation Economic Outcast” — ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய பொருளாதார அஸ்திரம். இதற்கு ஈரான் என்ன பதிலடி கொடுக்கப் போகிறது என்பதே அடுத்த முக்கியக் கேள்வியாகியுள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி பொருளாதாரப் போர் ஈரானுக்கு எதிரான பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி “Operation Economic Outcast” என்ற புதிய நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.பெசென்டின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஈரான் அரசைத் தாங்கி நிற்கும் பொருளாதார மற்றும் நிதி வழித்தடங்களை துண்டிப்பது, அந்நாட்டை சர்வதேச பொருளாதார அமைப்பில் இருந்து தனிமைப்படுத்துவது என்பதாகும்.புதிய நடவடிக்கையின் கீழ் குறிப்பாக 5 முக்கிய துறைகள் குறிவைக்கப்பட்டுள்ளனடிஜிட்டல் சொத்துகள் தொழில்நுட்பம்தங்கம்விமானப் போக்குவரத்துகப்பல் மற்றும் கடல்சார் துறைமேலும், ஈரானின் எண்ணெய் வருவாய், பணப் பரிமாற்றங்கள் மற்றும் தடைகளைத் தவிர்க்க உதவும் நிறுவனங்கள் மீதும் அழுத்தம் அதிகரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே சுமார் 60 நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கப்பல்கள் மீது புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கையின் முக்கியமான அம்சம் ஈரானை மட்டும் குறிவைப்பதல்ல.ஈரானுடன் தொடர்ந்து பொருளாதார உறவுகளை வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கும் அமெரிக்க தடைகள் விரிவுபடுத்தப்படலாம் என்று பெசென்ட் எச்சரித்துள்ளார். குறிப்பாக ஈரானின் எண்ணெய் கொள்முதல், கப்பல் போக்குவரத்து, நிதி பரிமாற்றம் மற்றும் தடைகளைத் தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது அழுத்தம் அதிகரிக்கலாம்.இதில் ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றான சீனாவும் முக்கிய கவனத்தில் உள்ளது. ஆனால் எந்த நாடுகள் மீது உடனடியாக இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்பது முழுமையாக அறிவிக்கப்படவில்லை.இதன் தாக்கம் ஈரானைத் தாண்டி, சர்வதேச எண்ணெய் சந்தை, கப்பல் போக்குவரத்து மற்றும் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கக்கூடும். புதிய அறிவிப்புக்குப் பிறகு எண்ணெய் விலைகள் சரிந்ததாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.“Operation Economic Outcast” — ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய பொருளாதார அஸ்திரம். இதற்கு ஈரான் என்ன பதிலடி கொடுக்கப் போகிறது என்பதே அடுத்த முக்கியக் கேள்வியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement