'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட காணிகளுக்கான கணக்கெடுப்பை காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் நடத்தவுள்ளது.
மண்சரிவு பாதித்த காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக மாற்றி, மீண்டும் அளவீடு செய்யப்படும் என ஆணையாளர் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்தார்.
மேலும், அபாய வலய காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் கொண்டவர்களுக்கு பெறுமதி மதிப்பீடு செய்து நட்டீடு அல்லது மாற்றுக் காணி ஒன்றை வழங்கக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் தயாராக உள்ளது.
இதற்கமைய, சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களை அந்தந்த மாவட்ட அரச அதிபர்களிடமிருந்து கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசு காணிகளில் அத்துமீறி தங்கியிருப்பவர்களையும் உள்ளடக்கி, பாதிக்கப்பட்ட மாவட்ட காணி அலுவலகங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில குடியிருப்பாளர்கள் அரச காணிகளில் அத்துமீறித் தங்கியிருப்பதுடன், அவர்கள் தொடர்பாகவும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க அத்திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி 'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட காணிகளுக்கான கணக்கெடுப்பை காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் நடத்தவுள்ளது.மண்சரிவு பாதித்த காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக மாற்றி, மீண்டும் அளவீடு செய்யப்படும் என ஆணையாளர் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்தார்.மேலும், அபாய வலய காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் கொண்டவர்களுக்கு பெறுமதி மதிப்பீடு செய்து நட்டீடு அல்லது மாற்றுக் காணி ஒன்றை வழங்கக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் தயாராக உள்ளது. இதற்கமைய, சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களை அந்தந்த மாவட்ட அரச அதிபர்களிடமிருந்து கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசு காணிகளில் அத்துமீறி தங்கியிருப்பவர்களையும் உள்ளடக்கி, பாதிக்கப்பட்ட மாவட்ட காணி அலுவலகங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சில குடியிருப்பாளர்கள் அரச காணிகளில் அத்துமீறித் தங்கியிருப்பதுடன், அவர்கள் தொடர்பாகவும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க அத்திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.